ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவெடுத்த ரெய்னா

ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவெடுத்த ரெய்னா

துபாய்: ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிரிக்கெட் மூலம் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, தற்போது இத்தகைய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் விளையாடும் ரெய்னா

ஐபிஎல்லில் விளையாடும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 15ம் தேதி தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. தான் விளையாடிய காலத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள இவர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி சார்பில் பங்கேற்று விளையாடுவதற்காக துபாயில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக ரன்களை குவித்த சாதனையும் இவரிடம் உள்ளது.

அதிர்ச்சியளித்த ரெய்னா சர்வதேச போட்டிகளில் கடந்த 2018 முதல் விளையாடாமல் உள்ளார் ரெய்னா. 33 வயதான ரெய்னா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை மீண்டும் துவங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுக்கு தன்னுடைய ஓய்வின் மூலம் அதிர்ச்சி அளித்துள்ளார் இவர். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் பயிற்சியளிக்க ரெய்னா முடிவு தற்போது ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்திவரும் சுரேஷ் ரெய்னா, ஜம்மு காஷ்மீரின் பின்தங்கிய மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங்கிற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் தனக்கிருக்கும் 15 ஆண்டு அனுபவத்தை பின்தங்கிய மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனவளம் குறித்தும் பயிற்சி இந்த முயற்சியில் 5 விதமான பிரிவுகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் திறனுடைய மாணவர்களை கண்டுபிடித்து பயிற்சி அளித்தல், அவர்களுக்கு முதன்மையான பயிற்சியை அளித்தல், மனவளம், பிட்னஸ் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட்டின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம், பிட்டாக இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment