சிஎஸ்கே வீரருக்கு கொரோனா வைரஸ்.. மொத்தம் 13 பேருக்கு பாதிப்பு.. கசிந்த தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாயில் முகாமிட்டுள்ளது. அந்த அணி விதிப்படி முதல் வாரம் குவாரன்டைனில் இருந்தது. அப்போது மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு வேகப் பந்துவீச்சாளர் மற்றும் 12 உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாய் சென்ற சிஎஸ்கே 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது. அந்த ஒரு சிஎஸ்கே வேகப் பந்துவீச்சாளர் யார்? என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. வேறு வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் இடையே…

Read More

நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகர் பகுதியில் 17, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த மான் குத்தி பட்டான் கல் , பாம்பு கொத்தி பட்டான் கல் என2 இரு நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறினார் .அவர் கூறியதாவது: வேட்டை, விவசாய நிலத்தில் பயிர்களை காக்க விலங்குகளுடன் சண்டை யிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுக்கற்கள் எடுப்பது வழக்கம். அந்தவகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்லில் வீரன் ஒருவன் பயிர்களை காக்கும் போது மான் தாக்கி இறந்துள்ளதை குறியீடாக நீண்ட கொம்புடைய மான் வீரனின் அருகே செதுக்கப்பட்டுள்ளது. எடை மற்றும் மார்பு பகுதி ஆபரண வேலைபாடுகளுடன் உள்ளது. இந்த சிற்பம் நாயக்கர் கால நடுக்கல் சிற்பம் ஆகும். இதேபோன்று பாம்பு கொத்தி பட்டான் கல்லை காணும் போது கால்நடை தொழில் செய்தவர்கள் பாம்புகளிடம் இருந்து கால்நடைகளை…

Read More

அரிமா சங்கம் உதவி

சிவகாசி:தொழில்நகர் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா ஜெயந்தி விழாவை முன்னிட்டு எல்வின் சென்டர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். மையத்திற்கு சானிடைசர் ஸ்டாண்டு வழங்கப்பட்டது. பூலாவூரணியை சேர்ந்த முனீஸ்வரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

Read More

சென்னம்பட்டி கால்வாயில் தண்ணீர் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வந்ததால் மகிழ்ச்சி

காரியாபட்டி:சென்னம்பட்டி கால்வாயில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்தை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி கே. கரிசல்குளம், சித்து மூன்றடைப்பு கண்மாய்களுக்கு நீர் வரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் குண்டாற்றின் குறுக்கே கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சரிவர மழை இல்லாததால் நீர் வரத்து எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவ்வப்போது திருமங்கலம் பகுதியில் பெய்யும் மழை நீர் வந்தாலும் கால்வாய் தூர்வாரப்படாமல் நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. தற்போது குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டதால் தற்போதைய கனமழையால் சென்னம்பட்டி கால்வாய் வழியாக கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர் வந்தது. கண்மாய் ஓரளவிற்கு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், கிணற்றில் தண்ணீர் ஊரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More

திறன் மேம்பாட்டு பயிற்சி

சாத்துார்:வட்டார வேளாண் துறை மூலம் கூட்டுப் பண்ணையம் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. என்.மேட்டுப்பட்டியில் நடந்த முகாமிற்கு வேளாண் உதவி இயக்குனர் சுப்பாராஜ் தலைமை வகித்தார். விருதை மில்லட்ஸ் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சப்ளை மேலாளர் மாரீஸ்வரன் பேசினார். தொழில்நுட்ப மேலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

Read More

உதவித்தொகை பெற அழைப்பு

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்றோருக்கான உதவி தொகையை தமிழக அரசு இரு மடங்காக உயர்த்தி உள்ளது.இதற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். உதவி தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் மட்டும் சுய உறுதிமொழி ஆவணத்தை ஆக. 31க்குள் அளிக்க வேண்டும், என கேட்டுள்ளார்.

Read More

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘மாஸ்க்

சிவகாசி:சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை கடையில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சந்திரபிரபா முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், கூட்டுறவு இணை பதிவாளர் திலீப்குமார், சப் கலெக்டர் தினேஷ் குமார், வழங்கல் அலுவலர் கல்யாண சுந்தரம், தாசில்தார் வெங்கடேஷன், அசன்பக்ருதீன், பொன்சக்திவேல் , கருப்பசாமி கலந்து கொண்டனர்.

Read More

அலட்சியம்சான்றுகளை வழங்க தாமதிக்கும் நகராட்சிகள்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்,ஆதார் கார்டு பெறுவதற்கு கொரோனா தொற்றினை காரணம் காட்டி தாமதம் செய்கின்றனர். இதற்காக அலையும் மக்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது. மாவட்டத்தில் ஏழு நகராட்சிகள் உள்ளன.இங்கு பிறப்பு, இறப்பு சன்றிதழ், குடிநீர் இணைப்பு, சொத்து வரி செலுத்துதல், பிளான் அப்ரூவல், தொழிற்சாலை உரிமம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொது மக்கள் வருகின்றனர். இதன் ஒவ்வொரு மனுக்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காது காலதாமதம் செய்கின்றனர். புரோக்கர்கள் மூலம் செல்லும் மனுக்களுக்கு உடனடிதீர்வு கிடைக்கிறது. இல்லையென்றால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மனுக்கள் கிடப்பிலே உள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த 5 லிருந்து 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் இதை பெறுவதற்கு 15 நாட்களுக்கு மேலாகிறது.பிற மனுக்களுக்கு 2 லிருந்து 3 மாதம் வரை ஆகிறது. இதேபோல்தான்…

Read More

#MKStalinForTN

தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவதையே லட்சியமாகக் கொண்ட மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தலைவர் தளபதி திரு M. K. Stalin அவர்களுக்கு சாத்தூர் S.V.சீனிவாசன் B.Com சட்டமன்ற தொகுதி, சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறேன் #MKStalinForTN

Read More