அலட்சியம்சான்றுகளை வழங்க தாமதிக்கும் நகராட்சிகள்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்,ஆதார் கார்டு பெறுவதற்கு கொரோனா தொற்றினை காரணம் காட்டி தாமதம் செய்கின்றனர். இதற்காக அலையும் மக்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.

மாவட்டத்தில் ஏழு நகராட்சிகள் உள்ளன.இங்கு பிறப்பு, இறப்பு சன்றிதழ், குடிநீர் இணைப்பு, சொத்து வரி செலுத்துதல், பிளான் அப்ரூவல், தொழிற்சாலை உரிமம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொது மக்கள் வருகின்றனர். இதன் ஒவ்வொரு மனுக்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காது காலதாமதம் செய்கின்றனர்.

புரோக்கர்கள் மூலம் செல்லும் மனுக்களுக்கு உடனடிதீர்வு கிடைக்கிறது. இல்லையென்றால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மனுக்கள் கிடப்பிலே உள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த 5 லிருந்து 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் இதை பெறுவதற்கு 15 நாட்களுக்கு மேலாகிறது.பிற மனுக்களுக்கு 2 லிருந்து 3 மாதம் வரை ஆகிறது. இதேபோல்தான் ஆதார் கார்டு எடுக்க வருபவர்களையும் அலைய வைக்கின்றனர். கொரோனா தடுப்பு பணி ஒருபுறம் நடந்தாலும் மக்களின் இப்பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாமே.

அறிவுறுத்தலாமே

முன்பெல்லாம் எந்தந்த மனுக்களுக்கு எத்தனை நாட்கள் என அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். தற்போது எங்கும் இல்லை. கவனித்தால் மட்டுமே விரைவில் வேலை முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

ஆத்தீஸ்வரன், தலைவர், ஜே.சி.ஐ., சிவகாசி நிலா.

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

Related posts

Leave a Comment