நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகர் பகுதியில் 17, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த மான் குத்தி பட்டான் கல் , பாம்பு கொத்தி பட்டான் கல் என2 இரு நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறினார்

.அவர் கூறியதாவது: வேட்டை, விவசாய நிலத்தில் பயிர்களை காக்க விலங்குகளுடன் சண்டை யிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுக்கற்கள் எடுப்பது வழக்கம். அந்தவகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்லில் வீரன் ஒருவன் பயிர்களை காக்கும் போது மான் தாக்கி இறந்துள்ளதை குறியீடாக நீண்ட கொம்புடைய மான் வீரனின் அருகே செதுக்கப்பட்டுள்ளது.

எடை மற்றும் மார்பு பகுதி ஆபரண வேலைபாடுகளுடன் உள்ளது. இந்த சிற்பம் நாயக்கர் கால நடுக்கல் சிற்பம் ஆகும். இதேபோன்று பாம்பு கொத்தி பட்டான் கல்லை காணும் போது கால்நடை தொழில் செய்தவர்கள் பாம்புகளிடம் இருந்து கால்நடைகளை காக்க வீரனை காவல் வைப்பர். பாம்பை எளிதில் பிடிக்கும் இவ் வீரன் உருவத்துடன் பாம்பின் உருவம் காலுக்கு கீழே சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் முறுக்கு மீசையுடன் இருப்பதால் இதுவும் நாயக்கர் கால சிற்பமாக கருதலாம், என்றார்.

Related posts

Leave a Comment