உச்சம் தொட்டது பட்டாணி விலை

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி பருப்பு உளுந்து வகைகள் வத்தல் விலை அதிகரித்துள்ளது.

கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2450, நல்லெண்ணெய் ரூ.3900, சன்பிளவர் எண்ணெய் ரூ.1550, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.1480, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.5300, 100 கிலோ சர்க்கரை ரூ.3700, மைதா 90 கிலோ பை ரூ.3330, 55 கிலோ பொரிகடலை ரூ.100 அதிகரித்து ரூ.3650, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.200 அதிகரித்து ரூ.8000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.500 அதிகரித்து ரூ.9000, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.400 அதிகரித்து ரூ.6700, உளுந்து லயன் ரூ.6800க்கும் விற்கப்படுகிறது.

மசூர் பருப்பு பருவட்டு ரூ.100 அதிகரித்து ரூ.7100, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.400 அதிகரித்து ரூ.10,400, பர்மா வகை ரூ.200 அதிகரித்து ரூ.7800, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு ரூ.200 அதிகரித்து ரூ.7600, 100 கிலோ பாசிப் பருப்பு ரூ.300 அதிகரித்து 8800, இந்திய பட்டாணி பருப்பு ரூ.1000 அதிகரித்து ரூ.7500, வெள்ளை பட்டாணி ரூ.1600 அதிகரித்து 8800, ஒரு குவிண்டால் ஆந்திரா ஏ.சி. வத்தல் ரூ.500 அதிகரித்து ரூ.12,000 முதல் 13,000க்கு விற்பனையாகிறது.

வடமாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால் உளுந்து பருப்புகள் சேதமடைந்துள்ளதால் இதுன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Related posts

Leave a Comment