சீரமையுங்க வனத்தில் அமைத்த குடிநீர் தொட்டிகள் சேதம்

ரீவில்லிபுத்துார்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தொட்டிகள் அமைக்கவும் தற்போதுள்ள தொட்டிகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் தேவதானத்திலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு வழியாக மதுரை மாவட்டம் சாப்டூர் வரை பரந்து விரிந்த வனப்பரப்பை கொண்டது ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலயம். 484 ச.கீ.மீட்டர் பரப்பளவு கொண்ட இங்கு சாம்பல்நிற அணில்கள், யானைகள், மான்கள்,காட்டெருமைகள், குரங்குகள், செந்நாய்கள் , பலவகை வண்ணத்துபூச்சிகள், மூலிகைகள் அதிகம் காணப்படுகிறது.

வனத்தின் உட்பகுதியில் இயற்கையில் அமைந்துள்ள மேடு, பள்ளங்களில் சேரும் தண்ணீரை வனவிலங்குகள் பயன்படுத்தி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வறட்சி காலங்களில் வனத்துறை அமைத்துள்ள தண்ணீர் தொட்டிகள் ,மலையடிவார மா மற்றும் வாழை தோப்புகளில் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்தாண்டு வனம் போதிய மழையின்றி வறண்டு கிடக்கிறது. இருக்கும் தண்ணீர் தொட்டிகளும் பழதடைந்தும் போதிய தண்ணீர் இல்லாமல் காணப்படுவதால் வனவிலங்குகள் பாதிக்கிறது. மான்கள் சமவெளிப்பகுதிக்கு வந்து உயிரிழக்கின்றன. இதை தவிர்க்க வன தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கவும் கூடுதல் தொட்டி அமைக்கவும் வனத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

வனத்தின் காவலன் விலங்குகள்

வனத்தின் பாதுகாவலர்களாக விளங்குவது வனவிலங்குகளே. அத்தகைய விலங்குளை பாதுகாப்பது மிகவும் அவசியம். வனமில்லையின்றால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் இயற்கையின் கொடைகள் பாதிக்கபடும். மலையில் வாழும் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க சிதைந்த தொட்டிகளை சீரமைத்து கூடுதல் தொட்டிகள் அமைக்கவேண்டும்.

-சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்……….

Related posts

Leave a Comment