வீடுகள் தோறும் மண் புழு உற்பத்தி

விருதுநகர்:ரசாயன உரங்கள், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் பயன்படுத்தி வருவதால் மண் மலட்டுத்தன்மை அடைகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக வேளாண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை தவிர்த்து மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் கிடைப்பதற்காக தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து பூக்கும் தருவாயில் மடக்கி உழுகின்றனர். இதனால் மண் நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்து புதுப்பொலிவு பெற்று இயற்கையான சத்துக்களுடன் பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் அதிகரிக்க வகை செய்கிறது.

இவற்றுடன் மண் புழு உரம் பயிர்களுக்கு சத்து டானிக்காகவும் பயன்படுகிறது. இவற்றின் பெருமைகளை உணர்ந்த விருதுநகர் அருகே உள்ள அழகியநல்லுார் கிராம பெண்கள் பலர் தங்களின் தோட்டத்துக்கு தேவையான இயற்கை உரங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் மண் புழு உரம் தயாரிப்பதில் கை தேர்ந்தவர்களாக மாறி உள்ளனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தை பத்து அடி நீளம், நான்கு அடி அகலம் கொண்ட குழியில் மக்க வைத்து தினமும் தண்ணீர் தெளித்து மண் புழுக்களை உற்பத்தி செய்கின்றனர். 30 நாள் இடைவெளியில் அடர்ந்தியான, நீளமான மண் புழுக்கள் உற்பத்தியாகின்றன.இவற்றின் கழிவுகளை பயிர்களுக்கு அடி உரமாக பயன்படுத்துவதால் மகசூலும் அதிகரிக்கிறது.

Related posts

Leave a Comment