நான் நீண்ட தூரம் பந்துகளை அடிப்பேன் என்பது சக வீரர்களுக்குத் தெரியும்: ‘5 சிக்ஸ்’ புகழ் ராகுல் திவேஷியா

ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து நேற்று ஒரே நாளில் ஹீரோவான ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேஷியா, ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் ஆச்சரியம்தான் என்றார். ஆனால் அணி வீரர்கள் தான் நீள நீளமான சிகர்களை அடிக்கக் கூடியவர் என்று தன்னை நம்பியதாக திவேஷியா தெரிவித்தார். மே.இ.தீவுகள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரல் வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார் திவேஷியா. அதுவும் 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற கிட்டத்தட்ட வெற்றி அசாத்தியமே என்ற சூழலில் அடித்து ஆட்டத்தையே மாற்றினார். திவேஷியா முதலில் மிகவும் போராடினார் 13 பந்துகளில் 5 ரன்கள் 19 பந்துகளில் 8 ரன்கள் என்று 2014 டி20 உ.கோப்பையில் யுவராஜ் சிங் திணறியது போல் திணறினார், முன்னால் இறக்கியது வீண் என்று பலரும் நினத்த தருணத்தில்…

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார்,திரு.பாண்டியராஜன்,திரு.முத்துஅய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்ததோடு, காணாமல் போன நகைகளை மீட்டனர்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

Dmk Sattur

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் செலுத்துவோம்….அனைவரும் வாருங்கள்எல்லோரும் நம்முடன்!!திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையுங்கள் இவன் S.V.சீனிவாசன்B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி …

Read More

“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்

சென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் புகழ் வாழும்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.. அவரது உடல்நிலை சற்று தேறி வந்த நிலையில், திடீரென ஆஸ்பத்திரி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.. அங்கு சென்ற அவர், எஸ்பிபி உடல்நிலை குறித்து…

Read More

பீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு! நவ.10-ல் வாக்கு எண்ணிக்கை!!

டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் 3 கட்டங்களில் பதிவான மொத்த வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப்…

Read More

கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்!

சென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக பாட்டு உலகில் கோலொச்சி வந்த ஆண் குயில் என அழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக்கும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, பெரும் இழப்பு இசை உலகத்திற்கு..பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

Read More

பஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை

ராஜபாளையம் : தேவதானத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் சாஸ்தா கோயில் ரோட்டில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தொலை துார பகுதியில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்வர். இங்கு செல்ல டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் உச்சி வெயிலில் 6கி.மீ., நடந்து செல்கின்றனர். இங்கு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

தவிர்ப்போமே! ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் தினந்தோறும் அதிகப்படியான குப்பை சேர்கின்றன. கிராம பகுதிகளை விட நகர் பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைத்திருப்பதில்லை. இதனால் கழிவுகள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தொட்டிகள் வைத்திருந்தாலும் முறையாக பயன்படுத்தாமல் மக்களும் அலட்சிய போக்கினை கடை பிடிக்கின்றனர். கொட்டப்படும் குப்பையை உள்ளாட்சிகள் முறையாக சேகரித்து நகரின் வெளிப்பகுதியில்தான் கொட்டி அழிக்க ,எரிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. எங்கு குப்பை அதிகம் சேர்கிறதோ அங்கேயே எரித்து விடுகின்றனர். இதில் ஏற்படும்…

Read More

மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்

விருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு எட்டிய துாரம் வரை தரிசுக் காடுகள், மரங்கள் இல்லாத சாலைகள் என மழையின்றி ஆண்டு முழுவதும் வறட்சியே நிலவுகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. அதில் 80 ஆயிரம் ஏக்கர் மானாவாரி சாகுபடி தான். தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவ மழை மட்டுமே மானாவாரி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது.இந்தாண்டு ஆவணி துவக்கத்தில் எரிச்சநத்தம், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர் உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை முடியும் தருவாயில் இருந்தாலும் நவம்பரில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை நம்பி…

Read More

மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 60 நகரும் ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.மக்கள் எளிதில் அணுக இயலாத, பகுதி நேர கடைகள் திறக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் நகரும் ரேஷன் கடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 110 பகுதிகள் பரிந்துரைக்கப் பட்டது. இதில் முதற்கட்டமாக 60 பகுதிகள் மட்டும் நகரும் ரேஷன் கடைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 12, சாத்துாரில் 11, திருச்சுழியில் 14, அருப்புக்கோட்டையில் 16, விருதுநகரில் 4, ராஜபாளையத்தில் 2, சிவகாசியில் 1 என 60 கடைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்காக கலெக்டர் கண்ணன் தலைமையில் வழித்தடங்கள், விநியோகிக்கும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More