Think the bossman Mahela Jayawardena liked this one
Read MoreDay: September 1, 2020
#COVID19 #CoronavirusPandemic #WHO
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாமல் ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது
Read MoreVanathi Srinivasan
இன்று எங்களது இல்லத்திற்கு மாநில தலைவர் திரு.L.முருகன் , துணைத்தலைவர்கள் திரு.கனகசபாபதி, திரு.அண்ணாமலை , பொதுச்செயலாளர்திரு.GKS செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் வருகையும், உரையாடலும் உற்சாகமானது.
Read More#SaiPallavi
திருச்சியில் எப்எம்ஜிஇ தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி; செல்பி எடுத்து மகிழ்ந்த சக தேர்வர்கள்
Read Moreநாம இங்க கொண்டாடறதுக்காக வரல.. விதிமுறைகளை மதிச்சு நடந்துக்கங்க
துபாய் : யூஏஇக்கு அணி வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்காக வரவில்லை என்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு நேரத்திலும் ஐபிஎல் போட்டிகளை விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்சிபியின் போல்ட் டயரிஸ் நிகழ்ச்சிக்காக பேசிய விராட் கோலி, யூஏஇக்கு கிரிக்கெட் விளையாடவே வந்துள்ளதாகவும் பயோ பபள் முறையை கருத்தில் கொண்டு அங்கும் இங்கும் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பயிற்சிகளில் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை யூஏஇயில் நடைபெறவுள்ளது. இதற்கென துபாயில் 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்களும் முகாமிட்டுள்ளனர். முதலில் குவாரன்டைனை முடித்துவிட்டு தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆர்சிபி அணியின் வீரர்களும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.…
Read Moreபோட்டிக்காக போகும்போது குவாரன்டைன் தேவையில்லை… எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தகவல்
துபாய் : ஐபிஎல் 2020 தொடர் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், அங்கு செல்லும் அணி வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டிகளுக்காக பயணம் மேற்கொள்ளும் அணி வீரர்கள் நேரிடையாக ஹோட்டல்களுக்கோ அல்லது மைதானங்களுக்கோ செல்லலாம் என்றும் அவர்களுக்கு குவாரன்டைன் அவசியம் இல்லை என்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடர் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள 8 அணிகளின் வீரர்களும் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டனர். இந்நிலையில் அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால் அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக குவாரன்டைனில் ஐபிஎல் அணி வீரர்கள் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டது.…
Read Moreநீட் பலிபீடம்.. நீட் கூட்டுத்துரோகம்.. அனிதாவுக்காக டுவிட்டரில் கொதித்த.. ஸ்டாலின்.. உதயநிதி
சென்னை: நீட் பலி பீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூக நீதிப் போராளி அனிதா.. என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் இந்த நீட் கூட்டுத்துரோகத்துக்கு தங்கை அனிதா பலியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர் அனிதா. மருத்துவ கனவை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அவருக்கு நீட் தேர்வுக்கு எதிராக தோல்வியே கிடைத்தது. இதனால் விரக்தி அடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் அவரால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு அப்போது கொண்டுவரப்பட நீட் தேர்வு காரணம் என்பதால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் குரல்கள் ஒலித்துக்கொண்டே…
Read Moreசெப்.14ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர்.. எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்!
செப்.14ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர்.. எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்! கொரோனாவிற்கு இடையே டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்காது. மாறாக இந்த முறை செப்.14ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டப் பேரவை கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். தனி மனித இடைவெளியுடன்…
Read Moreசெப்.15-க்கு பின் கல்லூரி இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு- நேரில் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பழகன்
சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. 10-ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டியிருந்த மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான…
Read MoreAnaiyur President Lakshminarayanan 01-09-2020
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் புலித்தேவரின் 305 – வது குருபூஜை ரிசர்வ்லயன் தேவர் திருமகனார் ஆலயத்தில் மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் லயன் கருப்பு (எ). திரு.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Read More