கண்களை கவரும் குவிமாடம்; பிரமிப்பூட்டும் கற்தூண்கள்: சிற்ப கட்டடக்கலைக்கு புகழ்சேர்க்கும் ஜோகில்பட்டி

விருதுநகர்:தமிழனின் தொன்மையான நாகரீகம், பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் வரிசையில் ஜோகில்பட்டி கிராமத்தில் கண்களை கவரும் குவிமாடம், கலைநயமிக்க கற்துாண்கள் என முத்தாலம்மன் கோயில் மண்டபம் நுாற்றாண்ட்டை கடந்தும் கம்பீரமாகவும், மிடுக்காக காட்சியளிக்கிறது.

விருதுநகர் காரியாபட்டி ரோட்டில் ஜோகில்பட்டி எனும் அழகிய கிராமத்தின் நடுவில் உள்ள முத்தாலம்மன் கோயில் மண்டபம் சிற்ப கலைக்கட்டத்திற்கு புகழ் பெற்றது. இதனருகே தெப்பக்குளம், விநாயகர், சுந்தரராஜபெருமாள், காளியம்மன், அய்யனார், முனியாண்டி, பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன.

கோயில் கிராமமான இங்குள்ள முத்தாலம்மன் கோயில் மண்டபம் புகழ் பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது பல்வேறு எதிர்ப்புகள், முட்டுக்கட்டை, தடைகளுக்கு இடையே 1873 ஏப்.,19ல் பல்வேறு நவீன வசதிகளுடன் கிராம மக்கள் ஒருங்கிணைந்து எழுப்பி உள்ளனர்.

Related posts

Leave a Comment