சாதனைப் பெண் வீரலட்சுமி: ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

புதிதாக தொடங்கப்பட்ட ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி

      தமிழகத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர் கே பழனிசாமி 118 ஐ நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிக்ழவில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி

      இதற்கிடையில், முதல் பெண் ஆம்புலன்ஸ் பைலட் எம்.வீரலட்சுமி, மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். “நீங்கள் பணம் சம்பாதிக்க பல வேலைகள் உள்ளன. ஆனால் எனது வேலை சேவை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே இதைத் தேர்ந்தெடுத்தேன். ”

      சென்னையில் பணிபுரியும் வீரலட்சுமிக்கு டாக்ஸி டிரைவராக மூன்று வருட அனுபவம் உள்ளது. அவரது கணவர் மற்றும் குடும்பதின்னர் ஆரம்பத்தில் மிகவும் ஆதரவாக இருந்தபோதிலும், இப்போது அவர்கள் கொரொனா நோய் தொற்று காரணமாக தற்போது சற்று தயங்குகின்றனர் என்றார்.

      பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதால், நான் ஏன் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பயப்பட வேண்டும், நான் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் இந்த துறையில் நுழைந்ததால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன் என்றார் வீரலக்ஷ்மி.

      டிப்ளோமா ஆட்டோமொபைல் டெக்னாலஜி முடித்து உள்ளார் வீரலக்ஷ்மி

Related posts

Leave a Comment