நாம இங்க கொண்டாடறதுக்காக வரல.. விதிமுறைகளை மதிச்சு நடந்துக்கங்க

துபாய் : யூஏஇக்கு அணி வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்காக வரவில்லை என்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு நேரத்திலும் ஐபிஎல் போட்டிகளை விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்சிபியின் போல்ட் டயரிஸ் நிகழ்ச்சிக்காக பேசிய விராட் கோலி, யூஏஇக்கு கிரிக்கெட் விளையாடவே வந்துள்ளதாகவும் பயோ பபள் முறையை கருத்தில் கொண்டு அங்கும் இங்கும் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிற்சிகளில் அணி வீரர்கள்

பயிற்சிகளில் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை யூஏஇயில் நடைபெறவுள்ளது. இதற்கென துபாயில் 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்களும் முகாமிட்டுள்ளனர். முதலில் குவாரன்டைனை முடித்துவிட்டு தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆர்சிபி அணியின் வீரர்களும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்சிபி கேப்டன் கோலி காட்டம் இந்நிலையில் யூஏஇக்கு அணி வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்காக வரவில்லை என்றும் கிரிக்கெட் விளையாடவே வந்துள்ளதாகவும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பயோ பபள் முறையை கடைபிடித்து பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இருக்க வலியுறுத்தியுள்ள அவர், அங்கும் இங்கும் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்கவும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் விளையாடுவது சிறப்பானது ஆர்சிபியின் போல்ட் டயரீஸ் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, இந்த கொரோனா அச்சுறுத்தல் நேரத்திலும் ஐபிஎல் போட்டிகளை விளையாடுவது சிறப்பானது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

5 மாதங்களுக்கு பிறகு பயிற்சி ஆட்டங்களில் முதன்முதலில் பங்கேற்ற போது மிகவும் பதட்டமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள கோலி, போட்டிகளை தவிர்க்க தான் விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் பாதுகாப்பும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் இல்லாமல் விளையாட வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பத்தை சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார். தன்னுடைய குழந்தை வரும் ஜனவரியில் பிறக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய மனைவியின் கர்ப்பம் குறித்து தான் அறியவந்ததும் நம்பமுடியாமல் ஆச்சர்யத்தில் ஆழ்ந்ததாகவும் அந்த உணர்வுகளை கூறுவது கடினமானது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment