மனதிற்கு நிம்மதி கிடைத்தது

கோயில்கள் திறக்கப்பட்டிருப்பது மனதிற்கு சந்தோசமாக உள்ளது. என்ன தான் வீட்டில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்டாலும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சுவாமி கும்பிடும் போது ஏற்படும் மனதிருப்திக்கு அளவே இல்லை. நேர்ந்ததும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கோயில் திறக்கப்படாமல் ஊரே களையிழந்து இருந்தது . தற்போது தான் கண்ணுக்கு நிறைவாக உள்ளது. ஆர்வமுடன் பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடனை செலுத்தியது நெகிழ்வான நிகழ்ச்சியாகும். எனது மனதிற்கு பிடித்த அம்மனான பத்திரகாளியம்மனை வணங்கியது மனநிறைவை தந்தது. கோமளவல்லி, குடும்பத்தலைவி, சாத்துார்.

Read More

உரம் வாங்க ஆதார் கட்டாயம்

விருதுநகர்:மொத்த, சில்லரை உர விற்பனையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம், புத்தாக்க பயிற்சி நடந்தது.வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமை வகித்து பேசியதாவது: உரம் விற்பனை போது ஆதார் உடன் பி.ஓ.எஸ்., கருவி மூலம் கைரேகை பதிவு செய்து விற்க வேண்டும். ஒரே நபருக்கு அதிக உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும், என்றார். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் ராஜேந்திரன், முத்துலெட்சுமி செய்திருந்தனர்

Read More

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பவுர்ணமி வழிபாட்டில் 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாணிப்பாறை மலையடிவாரத்தில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். வனத்துறையினரின் சோதனைக்கு பின் காலை 7:30 மணி முதல் மலையேற அனுமதிக்க பட்டனர். கோயிலில் பவுர்ணமி வழிபாடுடன் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மதியம் ஒருமணி வரை ஆயிரத்து 29 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். இன்று மதியம் 1:00 மணிவரை அனுமதிக்கபடுகிறார்கள் .* ஆண்டாள்கோயில்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப பூஜைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். மெட்டல் டிடெக்டர், தெர்மல்ஸ்கேனர் சோதனையுடன் கிருமிநாசினி வழங்கபட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read More

சீறி பாய்ந்த பஸ்கள்; நெஞ்சம் நெகிழ்ந்த தொழிலாளர்கள்

விருதுநகர்:அரசு அறிவித்த தளர்வுகளின் படி மாவட்டத்தில் முழுவீச்சில் தொழிற்சாலைகள், பொதுப்போக்குவரத்து இயங்கின. கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களாக சிரமப்பட்ட மக்களுக்கு தளர்வுகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் — அருப்புக்கோட்டை, சாத்துார் – -ராஜபாளையம், விருதுகர் — ராஜபாளையம், விருதுநகர் — பிளவக்கல், சாத்துார்- ராஜாபாளையத்திற்கு 12 புறநகர் பஸ்கள் , 82 டவுன் பஸ்கள் என 94 பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட எல்லைகளான ஆவல்சூரன்பட்டி, நரிக்குடி மறையூர் விலக்கு, நள்ளி விலக்கு, ராஜாபாளையம் சொக்கநாதன்புதுார் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்சில் சென்றனர்.பட்டாசு, தீப்பெட்டி, பிரின்டிங், உணவு பொருள் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் முழுவீச்சில் இயங்கின. இ.பாஸ் ரத்தால் வாகனங்களும் விருதுநகர் வழியாக மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் சீறி பாய்ந்தன. வங்கிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் நுாறு…

Read More