சீறி பாய்ந்த பஸ்கள்; நெஞ்சம் நெகிழ்ந்த தொழிலாளர்கள்

விருதுநகர்:அரசு அறிவித்த தளர்வுகளின் படி மாவட்டத்தில் முழுவீச்சில் தொழிற்சாலைகள், பொதுப்போக்குவரத்து இயங்கின.

கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களாக சிரமப்பட்ட மக்களுக்கு தளர்வுகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் — அருப்புக்கோட்டை, சாத்துார் – -ராஜபாளையம், விருதுகர் — ராஜபாளையம், விருதுநகர் — பிளவக்கல், சாத்துார்- ராஜாபாளையத்திற்கு 12 புறநகர் பஸ்கள் , 82 டவுன் பஸ்கள் என 94 பஸ்கள் இயக்கப்பட்டன.

மாவட்ட எல்லைகளான ஆவல்சூரன்பட்டி, நரிக்குடி மறையூர் விலக்கு, நள்ளி விலக்கு, ராஜாபாளையம் சொக்கநாதன்புதுார் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்சில் சென்றனர்.பட்டாசு, தீப்பெட்டி, பிரின்டிங், உணவு பொருள் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் முழுவீச்சில் இயங்கின.

இ.பாஸ் ரத்தால் வாகனங்களும் விருதுநகர் வழியாக மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் சீறி பாய்ந்தன. வங்கிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் நுாறு சதவீத ஊழியர்களுடன் இயங்கின. தொற்று அபாயம் குறைந்து வரும் நிலையில் பொதுமக்களும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.

முழு ஒத்துழைப்பு தாருங்கள்

பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இன்னும் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு செயலபட வேண்டும். யாருக்காவது அறிகுறி தென்பட்டால் மாவட்ட புகார் எண் 04562 1077ல் புகார் அளிக்கலாம்.

கண்ணன், கலெக்டர்.

Related posts

Leave a Comment