சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பவுர்ணமி வழிபாட்டில் 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தாணிப்பாறை மலையடிவாரத்தில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். வனத்துறையினரின் சோதனைக்கு பின் காலை 7:30 மணி முதல் மலையேற அனுமதிக்க பட்டனர். கோயிலில் பவுர்ணமி வழிபாடுடன் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மதியம் ஒருமணி வரை ஆயிரத்து 29 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். இன்று மதியம் 1:00 மணிவரை அனுமதிக்கபடுகிறார்கள்

.* ஆண்டாள்கோயில்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப பூஜைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். மெட்டல் டிடெக்டர், தெர்மல்ஸ்கேனர் சோதனையுடன் கிருமிநாசினி வழங்கபட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related posts

Leave a Comment