#happyteachersday

அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! இவன் S.V.சீனிவாசன் B.Com, திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி ……

Read More

“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.

“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.                    தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று, நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது,          ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக. தேசிய நல்லாசிரியர் தினம் அன்று, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் 2020, விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்          விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் (செஞ்சி தாலுக்கா) , அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.திலிப் ராஜு மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி.சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.           இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

Read More

கிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

ஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்?’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர்,’ என்றார்.

Read More

அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்

அருப்புக்கோட்டை:சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய 8 மகா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பொது வாழ்க்கைக்கு உடன்படாதவர்கள். தங்களுக்கு என்று தனி வாழ்வியல் முறைகளை ஏற்படுத்தி கொண்டவர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இதனால் இவர்களுக்கு இயற்கையை கடந்த சக்தி உள்ளது என்கின்றனர். பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடலில் தான் உள்ளது. உடலை நன்கு பராமரிப்பதே கடவுளுக்கு செய்கின்ற பணி. இதுவே சித்தர்களின் கொள்கை. இத்தகைய சித்தர்கள் அருப்புக்கோட்டையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். சில 100 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை ஒரு வில்வவனமாக இருந்துள்ளது. சுற்றிலும் மல்லிகை தோட்டங்கள் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. இயற்கையான சூழ்நிலை பிடித்து போனதால் பல சித்தர்கள் இதையே இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர்.

Read More

நீர்நிலைகளை அலங்கரிக்கும் பறவைகள்

விருதுநகர்:ஊரடங்கால் நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது. ஆழ்ந்த அமைதியான நேரத்தில் சாலைகள், குடியிருப்புகளிலும் உல்லாசமாய் பல கோடி பறவைகள் சுற்றி திரிந்தன. தற்போது மீண்டும் வாகன புகைமூட்டங்களும், இரைச்சல்களும் முன்பு போலவே வந்து விட்டது. இதனால் பறவைகளும் தங்கள் இருப்பிடங்களான நீர்நிலைகள், வனப்பகுதிகளை நோக்கி செல்ல துவங்கி விட்டன. அந்த வகையில விருதுநகர் குல்லுார்சந்தையில் பறவைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. மதுரை பேரையூர் மங்களரேவு அணைக்கட்டு உபரி நீர், கண்மாய் நீர் இணைந்து விருதுநகர் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது. இங்கு சேகரமாகும் நீர் அங்கிருந்து கவுசிகா நதியாக விருதுநகர் வழியாக செல்கிறது. இந்த நதிக்கு குறுக்கே தான் குல்லுார்சந்தை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கம், உணவுக்காக வந்து செல்கின்றன.

Read More

அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்

அருப்புக்கோட்டை:மாவட்ட கல்வி அலுவலராக சுப்பிரமணியன் பதவியேற்றார். ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆசிரியர் கூட்டணி பொது குழு உறுப்பினர் பாலமுருகன், திருச்சுழி செயலாளர் சந்திரசேகர், நரிக்குடி செயலாளர் சண்முகவேல் வாழ்த்தினர்.

Read More

புரிந்துணர்வு ஒப்பந்தம்

விருதுநகர்:காமராஜ் பொறியியல் கல்லுாரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே நெடுஞ்சாலை பராமரிப்பில் கல்லுாரியின் பங்களிப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மேலாளர் சரவணன், மேலாளர் மதிவாணன், கல்லுாரி செயலாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் ஆனந்த் ஆச்சாரி கையெழுத்திட்டனர். பொருளாளர் பெரியசாமி உடனிருந்தார்.

Read More

பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை

அருப்புக்கோட்டை:நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயில் அம்மனை தரிசித்தால் வேண்டியது நிறைவேறும். பூ போட்டு பார்த்தால் காரியம் ஜெயமாகும். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பெத்தம்மாளின் பிறந்த ஊர். புகுந்த வீடு ஆத்திபட்டி. இவர் மலை கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று விட அங்கு தகராறு உருவாகி உள்ளது. பிறந்த வீட்டிற்கு செல்வதா, புகுந்த வீட்டிற்கு செல்வதா என்ற நிலையில் தான் இருந்த இடத்திலே அக்னி வளர்த்து அதில் இறங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது. இதன்பின் அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் பெத்தம்மாளை வழிபட்டு வந்தனர். கால போக்கில் கோயில் எழுப்ப முனைந்த போது தடை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் தருவேன் என பெத்தம்மாள் அருள்வாக்கில் கூறியதால்…

Read More

சிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் இந்த சீசனில் ஆடப் போவதில்லை என அறிவிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த மூத்த வீரர் ஹர்பஜன் சிங். அவர் இந்தியாவிலேயே தான் இருக்கிறார். அவர் துபாய் செல்லும் முடிவை அறிவிக்க செப்டம்பர் 4 தான் கடைசி நாள். சிஎஸ்கே அபார திட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆட துவக்கம் முதலே திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. ஏப்ரல் – மே மாதத்தில் நடக்க இருந்த ஐபிஎல் தொடருக்கு மார்ச் மாத துவக்கத்திலேயே பயிற்சி செய்யத் துவங்கியது. அச்சம் அப்போது அனைத்து வீரர்களும் அதில் கலந்து கொண்டனர். இதன் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,…

Read More