கிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

PM_Modi, Tamilnadu, IPS_Officer, KiranSruthi, மோடி, ஐபிஎஸ், அதிகாரி, கிரண் ஸ்ருதி

ஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார்.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்?’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர்,’ என்றார்.

Related posts

Leave a Comment