“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.

“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.          

         தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று, நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது,

         ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக. தேசிய நல்லாசிரியர் தினம் அன்று, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் 2020, விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

         விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் (செஞ்சி தாலுக்கா) , அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.திலிப் ராஜு மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி.சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

          இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

Related posts

Leave a Comment