நீர்நிலைகளை அலங்கரிக்கும் பறவைகள்

விருதுநகர்:ஊரடங்கால் நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது. ஆழ்ந்த அமைதியான நேரத்தில் சாலைகள், குடியிருப்புகளிலும் உல்லாசமாய் பல கோடி பறவைகள் சுற்றி திரிந்தன.

தற்போது மீண்டும் வாகன புகைமூட்டங்களும், இரைச்சல்களும் முன்பு போலவே வந்து விட்டது. இதனால் பறவைகளும் தங்கள் இருப்பிடங்களான நீர்நிலைகள், வனப்பகுதிகளை நோக்கி செல்ல துவங்கி விட்டன. அந்த வகையில விருதுநகர் குல்லுார்சந்தையில் பறவைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது.

மதுரை பேரையூர் மங்களரேவு அணைக்கட்டு உபரி நீர், கண்மாய் நீர் இணைந்து விருதுநகர் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது. இங்கு சேகரமாகும் நீர் அங்கிருந்து கவுசிகா நதியாக விருதுநகர் வழியாக செல்கிறது. இந்த நதிக்கு குறுக்கே தான் குல்லுார்சந்தை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கம், உணவுக்காக வந்து செல்கின்றன.

Related posts

Leave a Comment