பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை

அருப்புக்கோட்டை:நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயில் அம்மனை தரிசித்தால் வேண்டியது நிறைவேறும். பூ போட்டு பார்த்தால் காரியம் ஜெயமாகும்.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பெத்தம்மாளின் பிறந்த ஊர். புகுந்த வீடு ஆத்திபட்டி. இவர் மலை கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று விட அங்கு தகராறு உருவாகி உள்ளது. பிறந்த வீட்டிற்கு செல்வதா, புகுந்த வீட்டிற்கு செல்வதா என்ற நிலையில் தான் இருந்த இடத்திலே அக்னி வளர்த்து அதில் இறங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.

இதன்பின் அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் பெத்தம்மாளை வழிபட்டு வந்தனர். கால போக்கில் கோயில் எழுப்ப முனைந்த போது தடை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் தருவேன் என பெத்தம்மாள் அருள்வாக்கில் கூறியதால் கோயில் பணி பாதியில் நிற்கிறது. பங்குனி பொங்கல், ஆடி வெள்ளி, மார்கழி மாதம் நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிப்பார். எலுமிச்சை மாலையை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Related posts

Leave a Comment