மழையால் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்று மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.மம்சாபுரத்திலுள்ள வாழைகுளம், வேப்பங்குளம், முதலியார்குளம் கண்மாய்களின், வெட்டு கிடங்குகள் நிரம்பி பரவலாக நீர்வரத்து ஏற்பட்டது. ஒருவார காலத்திற்கு விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

Related posts

Leave a Comment