ஸ்ரீவில்லிப்புத்துார், -மேகமலை புலிகள் சரணாலயம்

கம்பம்:எஸ்.எம்.டி.ஆர் எனப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார்,- மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்துார் சரணாலயம். இதை ஒட்டி மேகமலை சரணாலயம் அமைந்துஉள்ளது. இச்சரணாலயத்தின் ஒரு பகுதி வெள்ளிமலையுடன் பெரியாறு புலிகள் சரணாலயம் இணைகிறது.

மற்றொரு பகுதி கொடைக்கானல் வனப்பகுதியில் இணைகிறது. கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு பிரிவு ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் சமீபத்தில் இணைத்துள்ளனர். ஆனைமலை புலிகள் சரணாலயம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துடன் இணைகிறது. எனவே ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் புலிகள் சரணாலயமாக மாறிவிடும்.

வனத்துறை உயரதிகாரி கூறுகையில், ‘தமிழக வனத்துறையின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீவில்லிப்புத்துார் மற்றும் மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்ற மத்திய வனஅமைச்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கென அமைச்சக உயரதிகாரிகள் குழு இரு இடங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின் அறிவிப்பு வெளியாகும்,’ என்றார்.

Related posts

Leave a Comment