கொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

டெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாத இறுதியில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் கடந்த 1ம் தேதி முதல் தங்கி பயிற்சி பெற்றுவரும் மல்யுத்த வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரது உடல்நிலை…

Read More

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

எஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்! துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது. லீக் சுற்றில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் ஆட உள்ளது. சிஎஸ்கே அணி இந்த முறை பல சிக்கல்களை சந்தித்த பின்னரே ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு வீரர்கள் உட்பட இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த அணி பயிற்சி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு வாரம் தாமதமாகவே சிஎஸ்கே அணி பயிற்சி செய்யத் துவங்கியது. மேலும், அந்த அணியின் அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா…

Read More

செய்தி சில வரிகளில்

சாத்துார் : வடக்கு ரத வீதியில் வ.உ.சி. பிறந்த நாள் விழா நடந்தது. உருவப்படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாடசாமி, ராமர், சேதுராமானுஜம், வாசன், தி.மு.க.,சார்பில் நகர செயலாளர் குருசாமி, முருகன் மாலை அணிவித்தனர்.

Read More

சிவகாசியில் கண்மாயின் நடுவே காடு: தனித்தீவாக உருவாக்குது எக்ஸ்னோரா

சிவகாசிமழை வேண்டும் என்றால் மரக்கன்றுகள் நட வேண்டும். அரசும் மரக்கன்று நடுவதை ஊக்குவித்து வருகிறது. மழை பெய்ய மரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சுத்தமான காற்று கிடைக்கவும் மரம் முக்கியமாகிறது.ஆனால் இதனை யாரும் உணர்வதில்லை. பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மரங்கள் மொத்தமாக ஒரே இடத்தில் காடாக காட்சியளித்தால் அப்பகுதியில் மழை அதிகளவில் பெய்யும். அந்த வகையில் சிவகாசி எக்ஸ்னோரா இன்னோவேட்டர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் மியாவாக்கி முறையில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் பெரியகுளம் தீவு அடர்வனம் என்ற பசுமை தீவை உருவாக்க உள்ளனர்.இதற்காக கண்மாயின் உள்ளே 15 அடி உயரத்தில் செயற்கை தீவு அமைக்கப்பட்டது. முதல் 4 அடி உயரத்திற்கு இயற்கை உரங்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். புங்கன், தான்சி, விலாம், ஸ்பெட்ரோலியா,…

Read More

அய்யனார் ஆற்றில் நீர் வரத்து

ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, அணைத்தலை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஆறாவது மைல் நீர்த்தேக்கம் 9 அடியை எட்டியது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

Read More

நீட் தேர்வுக்கு ரெடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நீட் தேர்வை எதிர் கொள்ள ஆங்கில மீடிய மாணவர்கள் 326 உட்பட 648 பேர் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ‘இபாக்ஸ்’ எனும் ஆன்லைன் வகுப்பு மூலம் ஏப்ரல் முதல் பயிற்சி மேற் கொண்டனர். தனியார் பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்றனர். செப்.13ல் தேர்வு நடப்பது உறுதியான நிலையில் மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் தயாராக உள்ளனர்.

Read More

ஆசிரியர்களுக்கு ரோட்டரி விருது

ஸ்ரீவில்லிபுத்துார் : வெஸ்ட்டன்கார்ட்ஸ் ரோட்டரி, ஜி.எஸ்.வி.ரோட்ராக்ட் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சூளை விநாயகா வித்யாலயா பள்ளியில் நடந்தது. தலைவர் சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். செயலர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சேர்மன் ஆறுமுகசெல்வன் விருதுகளை வழங்கினார். மரகன்றுகள் நடபட்டது. முன்னாள் தலைவர் பரலோகம், செயலர் சந்தானமாரிமுத்து, பள்ளி நிர்வாகிகள் கந்தசாமி, ஸ்ரீனிவாசன், சீனிவாசன் பங்கேற்றனர். பட்டயதலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

Read More