கொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

டெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாத இறுதியில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் கடந்த 1ம் தேதி முதல் தங்கி பயிற்சி பெற்றுவரும் மல்யுத்த வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒலிம்பிக்கில் 86 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ள தீபக் புனியா, மற்றும் நவீன், கிரிஷன் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சாய் பதிவிட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தீபக் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பயிற்சியில் பங்கேற்பார் இதையடுத்து தன்னுடைய வீட்டில் தீபக் புனியா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார். இந்த குவாரன்டைன் காலததிற்கு பிறகு மீண்டும் அவர் பயிற்சி முகாமிற்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரும் கொரோனா பாதிப்புகள் முன்னதாக கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாத இறுதியில் தனிமைப்படுததப்பட்டார். விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

Related posts

Leave a Comment