தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

எஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்! துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது. லீக் சுற்றில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் ஆட உள்ளது. சிஎஸ்கே அணி இந்த முறை பல சிக்கல்களை சந்தித்த பின்னரே ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு வீரர்கள் உட்பட இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த அணி பயிற்சி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு வாரம் தாமதமாகவே சிஎஸ்கே அணி பயிற்சி செய்யத் துவங்கியது.

மேலும், அந்த அணியின் அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் கடைசி நேரத்தில் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினர். அவர்கள் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பாகும்.

இந்த நிலையில், கேப்டன் தோனியை நம்பியே சிஎஸ்கே அணி இந்த முறையும் களமிறங்க உள்ளது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியையும் இரண்டு முறை சந்திக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் சிஎஸ்கே அணி பங்கேற்க உள்ளது.

செப்டம்பர் 19 அன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே அணி தன் கடைசிப் போட்டியில் நவம்பர் 1 அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்க உள்ளது.

சிஎஸ்கே போட்டி அட்டவணை

சிஎஸ்கே போட்டி அட்டவணை சிஎஸ்கே அணி பங்கேற்க உள்ள 14 போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி இங்கே காணலாம். செப்டம்பர் 19: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, 7:30 PM IST செப்டம்பர் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி ஐ.எஸ் செப்டம்பர் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 2: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 4: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், இரவு 7:30 மணி அக்டோபர் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி அக்டோபர் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 13: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 17: டெல்லி தலைநகரங்கள் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி அக்டோபர் 19: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி அக்டோபர் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி அக்டோபர் 25: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், மாலை 3:30 மணி அக்டோபர் 29: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய், இரவு 7:30 மணி நவம்பர் 1: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், அபுதாபி, மாலை 3:30 மணி கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

Related posts

Leave a Comment