திரு.தங்கம்தென்னரசு MLA

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதி, காரியாபட்டி ஒன்றியம், அரசகுளம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிதண்ணீர் சின்டெக்ஸ் தொட்டியை திறந்து வைத்தார்

Read More

கொரோனா இருப்பதாக கூறி தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து பேனர் வைத்த குடும்பத்தினர்

கோவை: கொரோனா வைரஸ் பாதிக்காக தங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோவை மாநகராட்சிக்கு நன்றி கூறி ஒரு குடும்பத்தினர் பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை ஹோப்ஸ் காலேஜ் அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் 4 பேருக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநகராட்சி சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி நால்வருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதாக கூறி, வீட்டின் முன்பாக தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட வைரஸ் சோதனையில் நான்கு பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத தங்களுக்கு நோய் தொற்று உள்ளதாக…

Read More

Online Chess Tournament to be held on 15th Sep

Online Chess Tournament to be held on 15th Sep After the successful conduct of the 1st Online tournament by Sivakasi Chess Club in August, we are pleased to inform that the club is organising its second edition with the same prize money of Rs.20000/- and no entry fee on 15th September. Send your entries by Whatsapp to IA Ganesh Babu S 99445 64728 with name, fide id, lichess id and date birth certificate (for U 15 and 12 categories). For further details, contact IA Anantharam R 94431 55852.

Read More

சுற்றுச்சூழல் காத்து லாபம் ஈட்டும் கிராமம்

விருதுநகர்:சுற்றுச்சூழலுக்கு முடிந்தளவு மனித குலம் கேடு விளைவித்து வருவது அசுர வேகத்தில் தொடர்கிறது. ஒரு காலத்தில் இரு கரைகளையும் முத்தமிட்டபடி நதிகளில் தண்ணீர் பாய்ந்தோடியது. தற்போது சாக்கடை கழிவு நீர் உள்ளாட்சி நிர்வாகங்களால் நதிகளில் நேரடியாக திருப்பி விடப்படுகிறது. குப்பை , இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளன. பன்றிகள் புகலிடமாக விளங்குகிறது. இதுபோன்ற அவலங்களால் நதிகள் தங்களின் அடையாளத்தை இழந்து விட்டன. சாயப்பட்டறை ரசாயன கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்து விஷமாகி வருகிறது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல வண்ண நிறங்களில் நுரை தள்ளியபடி ஓடுவது இயற்கைக்கு எதிராக மனிதன் செய்து வரும் கேடுகள் கொடுமைகளின் எச்சங்களை எடுத்து காட்டுகிறது. மனிதனை தவிர சுற்றுச்சூழலுக்கு கேடான காரியங்களை உலகில் வேறெந்த உயிரினமும் செய்யவில்லை.எனினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இயற்கையை நேசிப்போர் பலர்…

Read More

குழாய் உடையுது: தொட்டி நிரம்பி வழியுது அலட்சியத்தால் வீணடிக்கப்படும் குடிநீர்

விருதுநகர்:விருதுநகரில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெறப்படும் தாமிரபரணி குடிநீர் ஆப்பரேட்டர்கள் அலட்சியத்தால் வீணாகி வருகிறது. மாவட்டத்தில் கிராமம் , நகர பகுதிகளுக்கு சீவலப்பேரி, வல்லநாடு, மானுார் குடிநீர் திட்டங்கள் மூலம் பல லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிக தொலைவில் இருந்து வருவதால் பைப்லைன் விரிசல்களால் அவ்வப்போது குடிநீர் வீணாகிறது. குடிநீர் ஏற்றும் ஆப்பரேட்டர்களும் மோட்டாரை போட்டு விட்டு அணைக்காமல் செல்வதாலும் தொட்டி நிறைந்து வீணாகிறது. ஆர்.ஆர்.,நகர் வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குடிநீர் ஏற்றும் நிலையத்தில் 4 நாட்களுக்கு மேலாக குடிநீர் நிரம்பி வீணாகிறது. இதே போன்றுதான் மாவட்டத்தின் பிற குடிநீர் ஏற்றும் நிலையங்களில் தெடர்கிறது. பல இடங்களில் இன்னும் தாமிரபரணி குடிநீர் கூட கிடைக்காமல் இருக்கும் நிலையில் இவ்வாறு வீணாகுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மே சிலர்…

Read More