குழாய் உடையுது: தொட்டி நிரம்பி வழியுது அலட்சியத்தால் வீணடிக்கப்படும் குடிநீர்

விருதுநகர்:விருதுநகரில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெறப்படும் தாமிரபரணி குடிநீர் ஆப்பரேட்டர்கள் அலட்சியத்தால் வீணாகி வருகிறது.

மாவட்டத்தில் கிராமம் , நகர பகுதிகளுக்கு சீவலப்பேரி, வல்லநாடு, மானுார் குடிநீர் திட்டங்கள் மூலம் பல லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிக தொலைவில் இருந்து வருவதால் பைப்லைன் விரிசல்களால் அவ்வப்போது குடிநீர் வீணாகிறது. குடிநீர் ஏற்றும் ஆப்பரேட்டர்களும் மோட்டாரை போட்டு விட்டு அணைக்காமல் செல்வதாலும் தொட்டி நிறைந்து வீணாகிறது.

ஆர்.ஆர்.,நகர் வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குடிநீர் ஏற்றும் நிலையத்தில் 4 நாட்களுக்கு மேலாக குடிநீர் நிரம்பி வீணாகிறது. இதே போன்றுதான் மாவட்டத்தின் பிற குடிநீர் ஏற்றும் நிலையங்களில் தெடர்கிறது. பல இடங்களில் இன்னும் தாமிரபரணி குடிநீர் கூட கிடைக்காமல் இருக்கும் நிலையில் இவ்வாறு வீணாகுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மே

சிலர் தாமிரபரணி குடிநீருடன் உப்புத்தண்ணீரையும் கலப்பதாக புகார் உள்ளது. இதனால் குடிநீரின் தரம் கெடுகிறது. இதன் மீது குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.நடவடிக்கை எடுங்கநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை ஆகும் நிலையில் அலட்சிய போக்கால் குடிநீரை வீணாக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாவாலி ஊராட்சியில் குளம் போல் தாமிரபரணி குடிநீர் தேங்கி கிடக்கிறது. இதற்கும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.காளிதாஸ், மக்கள் நீதி மய்யம்.எங்களுக்காவது தரலாம்ரோசல்பட்டி ஊராட்சியில் அதிகளவில் மக்கள் தொகை உள்ளது. வீணாகும் குடிநீரை எங்கள் பகுதி மக்களுக்காவது தரலாம். எங்கள் பகுதியில் பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

தாமிரபரணி நீருடன் போர் நீரையும் கலப்பதால் உப்பு கரிக்கிறது.புஷ்பராஜ், தனியார் ஊழியர்.குடிநீரை பாதுகாக்க வேண்டும்பிற மாவட்டங்களில் இருந்து பெறும் குடிநீரை வீணாக்குவதை மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் கண்டிக்க வேண்டும். கடந்தாண்டு சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னையை பார்த்தோம்.

விருதுநகரில் உள்ளூர் நீராதாரங்களே இல்லை. வரும் நீரையாவது உருப்படியாக பாதுகாக்க வேண்டும். பால்பாண்டி, தனியார் ஊழியர்.நடவடிக்கை எடுக்கப்படும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் குடிநீரை வீணாக்குவது தவறான செயல்பாடாகும். அவ்வாறு வீணாக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்ஜெயபிரகாஷ், செயற்பொறியாளர், குடிநீர் வடிகால் வாரியம்.

Related posts

Leave a Comment