கொரோனா இருப்பதாக கூறி தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து பேனர் வைத்த குடும்பத்தினர்

கோவை: கொரோனா வைரஸ் பாதிக்காக தங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோவை மாநகராட்சிக்கு நன்றி கூறி ஒரு குடும்பத்தினர் பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹோப்ஸ் காலேஜ் அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் 4 பேருக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநகராட்சி சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி நால்வருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதாக கூறி, வீட்டின் முன்பாக தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்

Congratulations to the corporation of Coimbatore who claimed to have Corona

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட வைரஸ் சோதனையில் நான்கு பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

கொரோனா தொற்று இல்லாத தங்களுக்கு நோய் தொற்று உள்ளதாக அசிங்கப்படுத்தியதாக கூறி, கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து தெரிவித்து பெரிய பேனர் ஒன்றை அவர்கள் தங்களது வீட்டின் வாசலிலேயே வைத்துள்ளார்.

அந்த பேனரில் அவர்களுக்கு நெகட்டிவ் முடிவு ஆவணங்களையும் அச்சிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து விசாரித்த போது அந்த உரிமையாளரின் தந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி என்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாகவும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதியன்று கோவை மாநகராட்சி சார்பில் அவர்களது இல்லத்தில் 4 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. கொரோனா சோதனை முடிவுகள் 3ஆம் தேதியன்று வெளியான நிலையில், 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது எனக் கூறி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் தனியார் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு சென்று 4 பேருக்கும் பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தன. வைரஸ் தொற்று இல்லாமலேயே வைரஸ் தொற்று உள்ளது எனக்கூறி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று தங்கள் வீட்டை அறிவித்ததால் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம் இதன் காரணமாக பேனர் வைத்திருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட பேனர் சம்பவம் கோவையில் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment