சுற்றுச்சூழல் காத்து லாபம் ஈட்டும் கிராமம்

விருதுநகர்:சுற்றுச்சூழலுக்கு முடிந்தளவு மனித குலம் கேடு விளைவித்து வருவது அசுர வேகத்தில் தொடர்கிறது.

ஒரு காலத்தில் இரு கரைகளையும் முத்தமிட்டபடி நதிகளில் தண்ணீர் பாய்ந்தோடியது. தற்போது சாக்கடை கழிவு நீர் உள்ளாட்சி நிர்வாகங்களால் நதிகளில் நேரடியாக திருப்பி விடப்படுகிறது. குப்பை , இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளன. பன்றிகள் புகலிடமாக விளங்குகிறது.

இதுபோன்ற அவலங்களால் நதிகள் தங்களின் அடையாளத்தை இழந்து விட்டன. சாயப்பட்டறை ரசாயன கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்து விஷமாகி வருகிறது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல வண்ண நிறங்களில் நுரை தள்ளியபடி ஓடுவது இயற்கைக்கு எதிராக மனிதன் செய்து வரும் கேடுகள் கொடுமைகளின் எச்சங்களை எடுத்து காட்டுகிறது.

மனிதனை தவிர சுற்றுச்சூழலுக்கு கேடான காரியங்களை உலகில் வேறெந்த உயிரினமும் செய்யவில்லை.எனினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இயற்கையை நேசிப்போர் பலர் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு தங்களால் இயன்றளவு பாடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது.

அந்த வரிசையில் விருதுநகர் மூளிப்பட்டி அருகே அம்மன்கோவில்பட்டி கண்மாயை சுற்றிலும் வேப்ப மரங்களை நட்டு பராமரித்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகின்றனர் கிராம மக்கள் . ஆடு மேய்ப்போர் ஓய்வெடுக்கவும் , வேப்பம் பழங்கள் சேகரிக்கவும், கண்மாய்க்குள் வேப்ப இலைகள் உதிர்ந்து விழுவதால் இயற்கையாகவே தண்ணீர் மாசடைவது தடுக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment