கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆருயிர் சகோதரர் முனைவர் திரு க. பொன்முடி, எம்.எல்.ஏ., அவர்களுக்கும், ஆருயிர் சகோதரர் திரு ஆ. ராசா, எம்.பி., அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவன் S.V.சீனிவாசன் B.Com, திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி
Read MoreDay: September 9, 2020
இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர், ஆருயிர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கழகப் பாராளுமன்றக் குழுத் தலைவர், ஆருயிர் அண்ணன், திரு. டி. ஆர். பாலு அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்! இவன்S.V.சீனிவாசன் B.Com, திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி.
Read Moreநாளை (செப் .10) மின் தடை
அருப்புக்கோட்டை அன்பு நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், மகாராணி தியேட்டர் பகுதி, நாடார் சிவன் கோயில் பகுதி, புளிம்பட்டி, பொட்டல்பட்டி, காந்தி மைதானம், பெர்கின்ஸ்புரம், எஸ்.பி.கே., பள்ளி ரோடு ,பொய்யாங்குளம், குறிஞ்சாக்குளம், கொட்டியான்குளம் .* நரிக்குடி, வீரசோழன், முக்குளம், வீரக்குடி, கே.கே. வாசித்தான், பள்ளப்பட்டி.* சிவகாசி சிறுகுளம், வீரார்பட்டி, அப்பைநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி………* (காலை 8:00 -மாலை 5:00 மணி) ஆர்.ஆர்.,நகர் முக்குரோடு, துலுக்கப்பட்டி, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனுார்.
Read Moreநாணய சேகரிப்பில் அசத்தும் கேட்டரிங் ஆசிரியர்
விருதுநகர்:அனைவருக்குமே சிறுவயதில் ஒரு கனவு இருந்திருக்கும். குடும்ப சூழ்நிலைகளால் அதை அடைய முடியாமல் போயிருக்கும். பின் வேலைக்கு சென்று அக்கனவுக்கு சிறு பணம் ஒதுக்கி நாளடைவில் அக்கனவை நோக்கி நகர்தல் புது உத்வேகத்தையும், பெரும் மகிழ்ச்சியையும் தரும். அதன் மூலம் கிடைக்கும் தன்னிறைவு அளப்பரியது. அந்த வகையில் விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி சேர்ந்த கேட்டரிங் ஆசிரியர் தன் சிறுவயது கனவான பழங்கால நாணய சேகரிப்பை ஆர்வத்தோடு செய்து வருகிறார். ஊதியத்தில் 20 சதவீதத்தை இதற்காக பயன்படுத்துகிறார். சோழர் கால நாணயங்கள், பல்லவர், முகாலயர், நிஜாமுதீன், கிழக்கிந்திய கம்பெனி, அணா நடைமுறையில் வெளியான நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் என வரலாற்றின் வணிக நிலையை எடுத்து கூறும் அனைத்து வகை நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார். மதுரையில் ஞாயிற்று கிழமை சந்தைகளில் வாரந்தோறும் பங்கேற்று பழைய நாணயங்களை சேகரிக்க துவங்கினார். பழைய…
Read Moreகல்கோட்டைக்கு இரும்பு வேலி மண் அரிப்பை தடுக்க ஏற்பாடு
விருதுநகர்:விருதுநகரில் மழை நீர் கால்வாயில் கல் கோட்டை எழுப்பி இரும்பு கம்பி வேலி அமைத்து மண் அரிப்பை பொதுப்பணித்துறை தடுத்துள்ளது .மாவட்டத்தில் வெட்ட வெளியில் பெய்யும் மழை நீரை கண்மாய்கள் நீர் நிலைகளில் சேமிக்கும் பொருட்டு நீர் வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.பல லட்சம் செலவில் காய்வாய்கள் அமைக்கப்பட்டன. கன மழையின் போது காட்டாற்று வெள்ளம் கால்வாய்களில் பாய்ந்தோடும் போது மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது. இதை தடுக்கும் பொருட்டு நீர் வரத்து கால்வாய்களில் மண் அரிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு கல் கோட்டை எழுப்பியுள்ளனர்.
Read Moreவி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவி.,கஸ்பாவிற்கு கந்தராஜ், வடக்கு ஸ்ரீவி.,க்குராஜகுரு, பொன்னாங்கன்னிக்கு வில்லியாழ்வார், சிங்கம்மாள்புரத்திற்கு சங்கர், அத்திகுளம் செங்குளத்திற்கு இந்திராகாந்தி, மம்சாபுரத்திற்கு பெரியசாமி, வெங்கடேஸ்வரபுரத்திற்கு சுந்தரம், அயன்நாச்சியார்கோயிலுக்கு பாலசுப்பிரமணியன், தைலாகுளத்திற்கு செல்வராஜ், விழுப்பனுாருக்கு ராமசாமி, வாழைக்குளத்திற்கு வேல்ராஜ், பிள்ளையார்குளத்திற்கு லட்சுமி என 12 பேர் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
Read Moreநகராட்சி தலைவர் படம் திறப்பு
ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் தனலட்சுமி மறைவையடுத்து அவரது உருவ படம் திறப்புவிழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். ஸ்ரீவி., எம்.எல்.ஏ., சந்திர பிரபா, நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பேசினர். நகர ஜெ. பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணராஜா, அவைத்தலைவர் பரமசிவம், கூட்டுறவு பால் சங்க தலைவர் வனராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகையா பாண்டியன், இலக்கிய அணி துணைச்செயலாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் ஜெ. பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா, விவசாய துணைத்தலைவர் முத்து கிருஷ்ண ராஜா, முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
Read Moreவங்கி தேர்வு இலவச பயிற்சி
விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: ஐ.பி.பி.எஸ்., மூலம் வங்கி கிளார்க் பணிக்கு ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 5, 12, 13 ல் ஆன்லைனில் தேர்வு நடக்கிறது. இதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது விரும்புவோர் 86438 62299, 77083 93991ல் பெயரை பதிவு செய்ய வேண்டும், என கேட்டு உள்ளார்.
Read More