கல்கோட்டைக்கு இரும்பு வேலி மண் அரிப்பை தடுக்க ஏற்பாடு

விருதுநகர்:விருதுநகரில் மழை நீர் கால்வாயில் கல் கோட்டை எழுப்பி இரும்பு கம்பி வேலி அமைத்து மண் அரிப்பை பொதுப்பணித்துறை தடுத்துள்ளது

.மாவட்டத்தில் வெட்ட வெளியில் பெய்யும் மழை நீரை கண்மாய்கள் நீர் நிலைகளில் சேமிக்கும் பொருட்டு நீர் வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.பல லட்சம் செலவில் காய்வாய்கள் அமைக்கப்பட்டன. கன மழையின் போது காட்டாற்று வெள்ளம் கால்வாய்களில் பாய்ந்தோடும் போது மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது.

இதை தடுக்கும் பொருட்டு நீர் வரத்து கால்வாய்களில் மண் அரிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு கல் கோட்டை எழுப்பியுள்ளனர்.

Related posts

Leave a Comment