நகராட்சி தலைவர் படம் திறப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் தனலட்சுமி மறைவையடுத்து அவரது உருவ படம் திறப்புவிழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். ஸ்ரீவி., எம்.எல்.ஏ., சந்திர பிரபா, நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பேசினர். நகர ஜெ. பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணராஜா, அவைத்தலைவர் பரமசிவம், கூட்டுறவு பால் சங்க தலைவர் வனராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகையா பாண்டியன், இலக்கிய அணி துணைச்செயலாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் ஜெ. பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா, விவசாய துணைத்தலைவர் முத்து கிருஷ்ண ராஜா, முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment