நாணய சேகரிப்பில் அசத்தும் கேட்டரிங் ஆசிரியர்

விருதுநகர்:அனைவருக்குமே சிறுவயதில் ஒரு கனவு இருந்திருக்கும். குடும்ப சூழ்நிலைகளால் அதை அடைய முடியாமல் போயிருக்கும். பின் வேலைக்கு சென்று அக்கனவுக்கு சிறு பணம் ஒதுக்கி நாளடைவில் அக்கனவை நோக்கி நகர்தல் புது உத்வேகத்தையும், பெரும் மகிழ்ச்சியையும் தரும். அதன் மூலம் கிடைக்கும் தன்னிறைவு அளப்பரியது.

அந்த வகையில் விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி சேர்ந்த கேட்டரிங் ஆசிரியர் தன் சிறுவயது கனவான பழங்கால நாணய சேகரிப்பை ஆர்வத்தோடு செய்து வருகிறார். ஊதியத்தில் 20 சதவீதத்தை இதற்காக பயன்படுத்துகிறார். சோழர் கால நாணயங்கள், பல்லவர், முகாலயர், நிஜாமுதீன், கிழக்கிந்திய கம்பெனி, அணா நடைமுறையில் வெளியான நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் என வரலாற்றின் வணிக நிலையை எடுத்து கூறும் அனைத்து வகை நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

மதுரையில் ஞாயிற்று கிழமை சந்தைகளில் வாரந்தோறும் பங்கேற்று பழைய நாணயங்களை சேகரிக்க துவங்கினார். பழைய பொருட்கள் இருக்க இருக்க மதிப்பு என்பது போல் நாணயம் சேகரிக்கும் பொழுதுபோக்கும் அவருக்கு மதிப்பை தந்து விட்டது. சேகரித்து வைத்துள்ள நாணயங்கள், அதில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை ஆன்லைன் வாயிலாக குறிப்பெடுத்து நாணயங்கள் பற்றி கேட்போருக்கு தெளிவுரை தருகிறார் இவர். பாராட்ட 70105 80286

நாணயங்கள் வரலாற்றின் அளவுகோல்

நாணய சேகரிப்பு மிகவும் நுட்பமான பொழுதுபோக்கு. அதை கலை என்றும் கூட சொல்லலாம். அதற்கான தேடல் தொடர்ந்து இருந்தால் மட்டுமே நிறைய நாணயங்கள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் எங்காவது அரிதான நாணயங்களை பார்த்தாலும் என்னிடம் தந்து விடுவர். நாணயங்கள் வரலாற்றின் அளவுகோல். அக்கால வணிக நிலைக்கு நாணயங்களே தேர்ந்த சாட்சி.

நாணய சேகரிப்பில் அசத்தும் கேட்டரிங் ஆசிரியர்
பாண்டியன், கேட்டரிங் ஆசிரியர்

Related posts

Leave a Comment