ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்பெட்டி தயாரிக்கும் ஆலையில் 990 இடங்களுக்கு ஐடிஐ படித்த தமிழர்கள் விண்ணப்பிக்க செப் 25 தேதி கடைசி நாள் ஆகும்.

Read More

மணல் அள்ளுவதில் விதிமீறல் ஆய்விற்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழராஜகுலராமன் கண்மாயில் குடிமராமத்து பணி சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிகளை பின்பற்றவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்கவும், குடிமராமத்து பணியை கண்காணிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வெம்பக்கோட்டை தாசில்தார் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டது.

Read More

சரி இல்லையே! நகராட்சிகளில் முடங்கி கிடக்கும் திட்டங்கள் …. கிடப்பில் போனது தூய்மை இந்தியா திட்டம்

விருதுநகர் : மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் மத்தியரசால் கொண்டு வரப்பட்ட துாய்மை இந்தியா திட்டமும் கிடப்பில் போனதால் திறந்தவெளிகழிப்பிடமும் அதிகரிக்க துவங்கி விட்டன. இங்குள்ள 7 நகராட்சிகளிலும் குப்பையை உரமாக்கும் திட்டம் பெயரளவிலே செயல்படுகிறது. குடிநீர் ஏ.டி.எம்., திட்டம் இன்று வரை எங்கும் செயல்படுத்தவில்லை. பாதாளசாக்கடை திட்டத்தையும் முறைப்படி மக்களிடம் கொண்டு செல்லவில்லை. விருதுநகரில் பல்வேறு முறைகேடுகளால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் விழிபிதுங்கி நிற்கிறது. திட்டம் முடிவுக்கு வரம் முன்பே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க பாதாளசாக்கடை கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் குல்லுார்சந்தை அணையில் விடப்படுகின்றன. இதனால் நீர்நிலைகளும் பாழாகின்றன. மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்ட பணிகள் எதுவும் நடப்பதே இல்லை. இதுவே துாய்மை நகரங்களில் நகராட்சிகள் பின்தங்க ஒரு காரணமாகிறது. இன்று…

Read More

ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை கஜலட்சுமி சன்னிதியில் எழுந்தருளிய கிருஷ்ணன், சத்தியபாமா, ருக்குமணி, தவழும் கண்ணன், விளையாட்டு கண்ணனுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகளை கவுதம்பட்டர் செய்தார்.செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் கோபி பங்கேற்றனர்.

Read More

முயற்சியின்றி முடக்கம்…

மாவட்டத்தில் போதியளவு மழை பொழிகிறது. அதை முறையாக சேமிக்க தவறுவதால் நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. குடிநீருக்காக மக்கள் இன்றும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் கட்டமைப்புகள் அனைத்தும் பராமரிப்பின்றி வீணாகின்றன.இதை முறைப்படுத்தினாலே போதும். ஆனால் அரசுத்துறை என யாரும் இதை கண்டுகொள்வதில்லை.

Read More

அறங்காவலர் குழு கூட்டம்

விருதுநகர் : சிவன் கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் வீ.எஸ்.பலராம் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தார். கோயில் சொத்துக்கள் மீட்பது, சிவகாசி சிவன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ராஜாகோபுரம் கட்டும் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் வேலாயுதம், பாலசுப்பிரமணியன், பரமசிவம், ருக்மணி, தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.

Read More

புகைப்படத்துடன் கோப்பை: அசத்தும் சிவகாசி கிரேட் லுக்

சிவகாசி : மனித வாழ்வில் ஒருவரின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது மிகப்பெரிய கவுரவம். இது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத தருணம். இவ்வாறு கொடுக்கப்படும் பரிசுகளுக்கு தனி மதிப்பு உண்டு. மேலும் தங்களது திறமையை வளர்த்து கொள்ள ஊக்குவிப்பாக இருக்கும். இவ்வாறு கிடைக்கும் பரிசு எத்தனை நாட்களானாலும் பொக்கிஷமாக பாதுகாப்பர். அதிலும் கேடயம், கோப்பை இன்னும் கவுரவாக இருக்கும். கேடயத்தில் பரிசு பெறுபவரின் புகைப்படம், பெயர் பொறித்து கொடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோடு காளீஸ்வரி மாலில் உள்ள சிவராஜ் சொந்தமான கிரேட் லுக் நிறுவனம் விரும்பிய வகையில் கேடயம், கோப்பை செய்து தருகிறது. நாம் நடத்தும் நிகழ்ச்சிக்கு பொருத்தமான வகையில் டிசைன் செய்து கேடயம் , கோப்பை செய்து கொடுக்கப்படுகிறது. பரிசு பெறுபவரின் புகைப்படம், பெயர் பொறித்து…

Read More

மணல் அள்ளுவதில் விதிமீறல் ஆய்விற்கு நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழராஜகுலராமன் கண்மாயில் குடிமராமத்து பணி சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிகளை பின்பற்றவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்கவும், குடிமராமத்து பணியை கண்காணிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வெம்பக்கோட்டை தாசில்தார் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டது.

Read More

‘செப்.18ல்மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளை தகவல்

ராஜபாளையம்:இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வதற்கான உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்தார். ராஜபாளையம் வர்த்தக சங்க கட்டடத்தில் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்த அவர் கூறியதாவது: 21 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செப்., 18 முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும், என்றார்.

Read More