விருதுநகர் : சிவன் கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் வீ.எஸ்.பலராம் தலைமையில் நடந்தது.
உதவி ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தார். கோயில் சொத்துக்கள் மீட்பது, சிவகாசி சிவன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ராஜாகோபுரம் கட்டும் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் வேலாயுதம், பாலசுப்பிரமணியன், பரமசிவம், ருக்மணி, தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.