புகைப்படத்துடன் கோப்பை: அசத்தும் சிவகாசி கிரேட் லுக்

சிவகாசி : மனித வாழ்வில் ஒருவரின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது மிகப்பெரிய கவுரவம். இது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத தருணம். இவ்வாறு கொடுக்கப்படும் பரிசுகளுக்கு தனி மதிப்பு உண்டு.

மேலும் தங்களது திறமையை வளர்த்து கொள்ள ஊக்குவிப்பாக இருக்கும். இவ்வாறு கிடைக்கும் பரிசு எத்தனை நாட்களானாலும் பொக்கிஷமாக பாதுகாப்பர். அதிலும் கேடயம், கோப்பை இன்னும் கவுரவாக இருக்கும். கேடயத்தில் பரிசு பெறுபவரின் புகைப்படம், பெயர் பொறித்து கொடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோடு காளீஸ்வரி மாலில் உள்ள சிவராஜ் சொந்தமான கிரேட் லுக் நிறுவனம் விரும்பிய வகையில் கேடயம், கோப்பை செய்து தருகிறது. நாம் நடத்தும் நிகழ்ச்சிக்கு பொருத்தமான வகையில் டிசைன் செய்து கேடயம் , கோப்பை செய்து கொடுக்கப்படுகிறது.

பரிசு பெறுபவரின் புகைப்படம், பெயர் பொறித்து நாம் எந்த வடிவத்தில் விரும்புகிறோமோ அந்த வடிவத்தில் செய்து தருகின்றனர்.சிவராஜ் கூறியதாவது: 7 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்பெல்லாம் கேடயம், கோப்பையில் முதல் பரிசு , 2 ம் பரிசு என பொறிக்கப்பட்டு பரிசு வழங்குவர். தற்போது போட்டிகளின் முடிவுகள் தெரிந்த பின்னர் புகைப்படம், பெயரை பொறித்து கொடுக்கப்படுகிறது. இதனால் பரிசு பெறுவர் சந்தோசமடைகின்றனர்,என்றார்.

Related posts

Leave a Comment