மணல் அள்ளுவதில் விதிமீறல் ஆய்விற்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழராஜகுலராமன் கண்மாயில் குடிமராமத்து பணி சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் விதிகளை பின்பற்றவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்கவும், குடிமராமத்து பணியை கண்காணிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வெம்பக்கோட்டை தாசில்தார் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டது.

Related posts

Leave a Comment