செப்டம்பர் 11 திரு இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறோம்…. இவண்…S.V.சீனிவாசன் B.Com திராவிட முன்னேற்றக் கழகம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி
Read MoreDay: September 11, 2020
ஸ்ரீவி.,யில் அரசு கலைக்கல்லுாரி
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு கலைகல்லுாரி துவங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சந்திரபிரபா எம்.எல்.ஏ., தெரிவித்தார். அவர் கூறியதாவது: கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கோரிக்கை எழுப்பியும், முதல்வரை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தேன். அதன்படி நடப்பு கல்வியாண்டில் கலைக்கல்லுாரி துவங்க முதல்வர் அனுமதியளித்துள்ளார். தற்காலிகமாக திருமுக்குளம் நகராட்சி பயணியர் கட்டடத்தில் கல்லுாரி செயல்பட பரிசீலிக்கபட்டு வருகிறது,என்றார். இதை தொடர்ந்து அவர் பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிலவள வங்கி தலைவர் முத்தையா கட்சியினர் பங்கேற்றனர்.
Read Moreஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்
விருதுநகர் : விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமம் கல்கோட்டை அமைத்து மழை நீர் சேமிப்பில் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் சார்பில் இக்கிராமத்தில் மழை நீர் சேமிக்க 2019- – 20ம் நிதியாண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. ரூ.15 லட்சம் மதிப்பில் இங்குள்ள பேரையூர் ரோட்டில் பழைய ஊரணியை துார் வாரப்பட்டு படிக்கட்டுகள் அமைக்கப் பட்டன. ஊரணி நடுவோ 30 அடி அகலம், 50 அடி நீளம், 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி மழை நீர் சேகரிப்பு மெகா தொட்டி அமைக்கப்பட்டது. இதை சுற்றிலும் காங்கிரீட் சுற்றுச்சுவர் எழுப்பி பக்கவாட்டு பகுதியில் கல் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது வெட்ட வெளியில் பாய்ந்தோடும் வெள்ள நீர் ஊரணிக்குள் திருப்பி விடப்படுகிறது. தற்போதைய மழையால் ஊரணி…
Read Moreஎண்ணெயில் பொறித்தாலே ‘ரெடி’
சாத்துார்கடல் சார் உணவுகள் (சீபுட்ஸ்) உடலுக்கு நன்மை பயக்ககூடியவை . மீனின் புரதச்சத்து மனிதர்கள் ஆரோக்கியம் காக்கும் மருந்தாக உள்ளது. விட்டமின் ஏ, பி,சி, சிங்க் போன்ற சத்துக்கள் அடங்கி இருப்பதால் கடல் நண்டு, இறால் போன்ற மீன் வகைகளை ருசிப்போர் ஏராளம். தற்போது பெரும்பாலான வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வரும் நிலையில் பலர் ஓட்டல்களில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு நிறுவனங்கள் உணவுகளை வித்தியாச முறையில் வழங்க துவங்கி விட்டன. அந்தவகையில் மீன்களில் நண்டு குழம்பு, நண்டு வறுவல் , மீன் குழம்பு என்று இல்லாமல் நண்டு சமோசா, நண்டு லாலிபாப் , மீன் சமோசா, இறால் சமோசா, பிஷ் பிங்கர், பிஷ் 65 போன்ற வகை உணவுகள் அறிமுகம் செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு துாத்துக்குடி இருந்து ஏற்றுமதியாகும் இது போன்ற வகைகள்…
Read Moreகண்காணிப்பு குழு கூட்டம்
விருதுநகர் : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் தலைவர் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்தது. கலெக்டர் கண்ணன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மத்திய, மாநில அரசு நிதிகள் மூலம் நடக்கும் வளர்ச்சிபணிகள் குறித்து ஆய்வு செய்யபட்டது. எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்) தங்கபாண்டியன் (ராஜபாளையம் ) டி.ஆர்.ஓ.,மங்களராம சுப்பிரமணியன், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், குருநாதன் பங்கேற்றனர்.
Read More