முப்பெரும் விழா

முப்பெரும் விழா – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் தி.மு.க துவக்க தினம் . இவண்… S.V.சீனிவாசன் B.Com திராவிட முன்னேற்றக் கழகம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி 

Read More

திருவண்ணாமலை புரட்டாசி சனி ; கார்,வேன் ஆட்டோவில் வர தடை

ஸ்ரீவில்லிபுத்துார் : திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் செப்.19 முதல் 5 வாரங்கள் சனிக்கிழமை நடக்க உள்ள புரட்டாசி சனி உற்ஸவத்தில் பக்தர்கள் கார்,வேன், ஆட்டோக்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பானஆலோசனை கூட்டம் சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. தாசில்தார் சரவணன், டி.எஸ்.பி.,நமசிவாயம், கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தரிசனம் செய்ய குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை. மற்ற பக்தர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்யலாம். தேங்காய் உடைக்க, அர்ச்சனை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அரசு டவுன் பஸ்களில் மட்டுமே வர வேண்டும். டூவீலர்களில் வருவது குறித்து இரு நாளில்முடிவு அறிவிக்கப்படும்.

Read More

உயிரை காப்பாற்றும் ரத்த தானம்

சிவகாசி : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறுவார்கள். வசதி படைத்தவர்கள் தங்களால் ஆன உதவியை இல்லாதவர்களுக்கு செய்வார்கள். சிலர் சமூக ஆர்வத்துடன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சமூக அமைப்பினை ஏற்படுத்தி தங்களுக்குள் பணம், பொருள் வசூல் செய்து உதவி செய்வார்கள். மேலும் சேவை செய்பவர்களை கவுரவித்தும் பெருமைப்படுத்துவார்கள். அந்த வகையில் சிவகாசி ஜே.சி.ஐ., சிவகாசி நிலா அமைப்பினர் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் பசியால் வாடியவர்களுக்கு தினமும் உணவு, வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை கண்டறிந்து பண உதவி, தினமும் கபசுர குடிநீர், மூலிகை சூப் வழங்கினர். கொரோனா காலத்தில் பணியாற்றிய தீயணைப்பு படையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோரை கவுரவித்து சிறப்பு சேர்த்தனர். இந்நிலையில் நேற்றும் சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் ரத்த தானம் முகாம் நடத்தி…

Read More

தண்டாலில் தேசிய சாதனை

விருதுநகர் : சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் 24. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் பி.காம்., படித்தவர். ஒரு நிமிடத்தில் 63 ஆர்ச்சர் தண்டால்களை எடுத்தார். இதை ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பு உறுதி செய்து பதக்கம், பாராட்டு சான்று வழங்கியது. இதற்கு முன் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் 55 தண்டால்களை எடுத்ததை இவர் முறியடித்துள்ளார்.

Read More