உயிரை காப்பாற்றும் ரத்த தானம்

சிவகாசி : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறுவார்கள். வசதி படைத்தவர்கள் தங்களால் ஆன உதவியை இல்லாதவர்களுக்கு செய்வார்கள்.

சிலர் சமூக ஆர்வத்துடன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சமூக அமைப்பினை ஏற்படுத்தி தங்களுக்குள் பணம், பொருள் வசூல் செய்து உதவி செய்வார்கள். மேலும் சேவை செய்பவர்களை கவுரவித்தும் பெருமைப்படுத்துவார்கள். அந்த வகையில் சிவகாசி ஜே.சி.ஐ., சிவகாசி நிலா அமைப்பினர் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் பசியால் வாடியவர்களுக்கு தினமும் உணவு, வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை கண்டறிந்து பண உதவி, தினமும் கபசுர குடிநீர், மூலிகை சூப் வழங்கினர்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய தீயணைப்பு படையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோரை கவுரவித்து சிறப்பு சேர்த்தனர். இந்நிலையில் நேற்றும் சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் ரத்த தானம் முகாம் நடத்தி ரத்தம் சேகரிக்க உதவினர்.

Related posts

Leave a Comment