ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்டு சீருடைப் பணியாளர் துறையில் உள்ள 10,906 காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை! 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.52 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சீருடைப் பணியில் வேலை

சீருடைப் பணியில் வேலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சீருடைப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட 10.906 + 72 (Bl) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் காவல்துறை : இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/ மாநகர ஆயுதப்படை) 3784 ( ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 3099.) இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டும்) சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள் (ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை : தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்).

கல்வித் தகுதி இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருத்தல் அவசியம். மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 01.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01,07,2020 அன்று 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவராகவும், எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் எவ்வளவு? மேற்கண்ட பணிகளுக்கு துறைகளுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ரூ.18,200 முதல் ரூ.52,900 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மதிப்பெண் வழிமுறைகள் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அடுத்து தகுதித் தேர்வாக உடற்கூறு அளத்தல் தேர்வும், ஓடுதல், உயரம், மார்பு கணக்கிடுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும்

மேற்கண்ட தமிழக அரசின் சீருடைப் பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tnusrbonline.org/ அல்லது http://www.tnusrb.tn.gov.in/about_us.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் அறிவிப்பு வெளியான நாள் – 17.09,2020 விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் – 26.09.2020 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 26.10.2020 தேர்வு நடைபெறும் நாள் – 13.12.2020

Related posts

Leave a Comment