வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். செப்.15 முதல் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மகாளய அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். அதிகாலையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு திரண்டனர். காலை 6:45 மணி முதல் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனதுர்க்கை, இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமி கோயில்களில் வழிபட்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னிதிகளில் வரிசையில் நின்று நாகாபரணம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை தரிசித்தனர்.மலை அடிவாரத்தில் ஏராளமான டூவீலர், கார், வேன்களில் பக்தர்கள் வந்த நிலையில் போதியளவிற்கு போலீசார் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அரசு…
Read MoreDay: September 18, 2020
ஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் காலை 7:20 மணி முதல் மதியம் 12:30, மாலை 4:00 – 6:00, இரவு 7:00 – 8:00 மணி வரை அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள்.
Read Moreஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்
விருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலைப்பணியில் ஈடுபடுகின்றனர். எல்லா கலைகளையும் விட கடினமானது ஓவிய கலை. வரைவது எளிதல்ல. உணர்வுப்பூர்வமாக உள்ளிருந்து வருவதே ஓவியம். ராணுவ மைதானங்களில் ஓடிய ஓட்டங்களில் ஓவியம் எனும் கலையை இறுகப்பிடித்து ஓய்வின் வாயிலாக தன்னை ஓவியராக்கி உள்ளார் விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த ஆறுமுகசோமு. இவர் 1965 முதல் 82 வரை 17 ஆண்டுகளாக ராணுவத்தில் சர்வேயராக பணிபுரிந்துள்ளார். கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்கான ஓவியங்கள் வரைந்து நற்பெயரையும் பெற்றுள்ளார். பேனாவில் ஓவியம் வரைவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் திருத்த இயலாது. நேர்த்தியான ஒருமைப்பாட்டுடன் வரைந்தால் மட்டுமே முழுமையாக வரைய…
Read Moreதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி
ஸ்ரீவில்லிபுத்துார், செப்.18-திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் நாளை (செப்.19) புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகிறார்கள். இதற்காக இன்று முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.நாளை முதல் ஐந்து சனிக்கிழமைகளில் காலை 3:30 மணி முதல் இரவு 7:30 மணிவரை 30 நிமிடத்திற்கு ஒரு குழுவாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக www.tnhrce.gov.inல் கட்டணம், கட்டணமில்லா தரிசனத்திற்கு முன்பதிவு செய்யவேண்டும்.10 வயதிற்குட்டபட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள். பக்தர்கள் சொந்த வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லாததால் கோவில்பட்டி, அருப்புகோட்டை, ராஜபாளையம், சிவகாசி, சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
Read Moreஓராண்டில் 4 முறை பராமரிப்பு
நரிக்குடி : நரிக்குடி கம்பாளியில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்டிய ஓராண்டில் நான்கு முறை பராமரிப்பு பணி நடப்பதால் இதன் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பள்ளியில் இட நெருக்கடியை தவிர்க்க ரூ. 1.69கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு 2019ல் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.திறந்த சில நாட்களிலே சிமென்ட் பூச்சு பெயர்ந்து மேற்கூரை கம்பிகள் தெரிந்ததால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதையடுத்து நடந்த பராமரிப்பு பணிகளும் சரிவர செய்யவில்லை. ஓராண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்தும் கட்டடத்தின் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது நான்காவது முறையாக பராமரிப்பு நடக்கின்றன. பள்ளி திறக்கப்பட்டாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கட்டடத்திற்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் கிராமத்தினர்.
Read Moreவிலகிய பொன்முடி.. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.. துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார் இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவுஇது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More