ஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்

விருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலைப்பணியில் ஈடுபடுகின்றனர். எல்லா கலைகளையும் விட கடினமானது ஓவிய கலை. வரைவது எளிதல்ல. உணர்வுப்பூர்வமாக உள்ளிருந்து வருவதே ஓவியம். ராணுவ மைதானங்களில் ஓடிய ஓட்டங்களில் ஓவியம் எனும் கலையை இறுகப்பிடித்து ஓய்வின் வாயிலாக தன்னை ஓவியராக்கி உள்ளார் விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த ஆறுமுகசோமு. இவர் 1965 முதல் 82 வரை 17 ஆண்டுகளாக ராணுவத்தில் சர்வேயராக பணிபுரிந்துள்ளார். கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்கான ஓவியங்கள் வரைந்து நற்பெயரையும் பெற்றுள்ளார்.

பேனாவில் ஓவியம் வரைவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் திருத்த இயலாது. நேர்த்தியான ஒருமைப்பாட்டுடன் வரைந்தால் மட்டுமே முழுமையாக வரைய முடியும். ஆனால் இவர் முறையாக ஓவியங்களை வரைகிறார். பொழுதுபோகாத நேரங்களில் கிடைக்கும் அட்டைகள், தாள்கள், தீப்பெட்டி அட்டைகளில் கூட வரைகிறார்.நானே கற்று கொண்டேன்சிறுவயது முதலே வரைவதில் அதீத ஆர்வமுண்டு. ஆனால் பள்ளி முடித்தவுடனேயே ராணுவத்தில் சேர்ந்து விட்டேன். அங்கு பணிபுரிந்த காலகட்டத்தில் விழா மேடை அலங்காரம், அழைப்பு பத்திரிக்கைகள் வடிவமைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவேன். ஓவியத்தை நான் தானாகவே தான் கற்று கொண்டேன்.ஆறுமுகசோமு, ஓய்வு ராணுவ வீரர்

Related posts

Leave a Comment