ஓராண்டில் 4 முறை பராமரிப்பு

நரிக்குடி : நரிக்குடி கம்பாளியில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்டிய ஓராண்டில் நான்கு முறை பராமரிப்பு பணி நடப்பதால் இதன் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பள்ளியில் இட நெருக்கடியை தவிர்க்க ரூ. 1.69கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு 2019ல் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.திறந்த சில நாட்களிலே சிமென்ட் பூச்சு பெயர்ந்து மேற்கூரை கம்பிகள் தெரிந்ததால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதையடுத்து நடந்த பராமரிப்பு பணிகளும் சரிவர செய்யவில்லை. ஓராண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்தும் கட்டடத்தின் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது நான்காவது முறையாக பராமரிப்பு நடக்கின்றன. பள்ளி திறக்கப்பட்டாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கட்டடத்திற்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் கிராமத்தினர்.

Related posts

Leave a Comment