சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்

இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவுஇது என்பது குறிப்பிடத்தக்கது.