இனி மதுரைக்கு போகவேண்டாம்: வந்தாச்சு எல்.இ.டி., போர்டுகள்

சிவகாசிகடைகள், நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அதை அடையாளப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்காக முகப்பில் பெரிதாக பெயர் எழுதப்பட்டு இருக்கும். சாதாரணமாக பெயின்டால் பெயர் எழுதியிருப்பர். இடத்தை பொறுத்து சிறிதாகவோ பெரிதாகவோ எழுதப்படும். முகப்பில் எழுதப்படும் பெயரின் தன்மையிலே அதன் தரத்தை உணர முடியும். தற்போது கடைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் எல்.இ.டி., ஒளிரும் பல்புகளால் பெயரை அலங்கரிக்கின்றனர். இதை பார்த்தவுடனே வாடிக்கையாளர்கள் கவரப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை இதுபோன்று அமைக்க மதுரையிலிருந்து ஆட்கள் வர வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் முதன் முறையாக சிவகாசி முருகன் கோயில் அருகே உள்ள பிரியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் ஒளிரும் எல்.இ.டி.,விளக்குகள் மூலமாக பெயர்களை அமைத்து தருகின்றனர். பொதுவாக ஒருமுறை அமைக்கப்பட்ட பெயரின் டிசைனை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் நிறுவனத்தினர் வந்து மாற்றி தர வேண்டும். ஆனால் இவர்கள் நாமே மாற்றி கொள்ளும் வகையில் அமைத்து தருகின்றனர். உழைப்பில் ஜொலிக்கும் கண்கவர் விளம்பர பலகைகள் ,நாம் விரும்பும் செய்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் எல்.இ.டி., விளக்குகள் மூலம் நாமே மாற்றி கொள்ளும் வகையில் தயார் செய்து தருகினறனர். இதை லேப்டாப் மற்றும் அலைபேசி மூலமாகவே நாமே எடிட் செய்ய முடியும். மழையில் நனைந்தாலும் பழுதாகாது. மிக குறைந்த மின் செலவில் பகலிலும் ஒளிரும் சக்தி கொண்டது. தொடர்புக்கு 90432 00001.

Related posts

Leave a Comment