மாசில்லா சிவகாசி

சிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது வெயிலில்தான் உணர முடிகிறது. மழை பொழிய மரங்கள் எவ்வளவு முக்கியமோ மன நிம்மதிக்கும் மரங்கள் அவசியம். தற்போது பெரும்பாலானோர் செடிகளின் அருமை உணர்ந்து மாடி, காலி மனையில் தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். பலர் புதிதாக வீடு கட்ட துவங்கும் போதே செடிகளையும் வளர்க்கிறார்கள். செடிகள், மரங்கள் வளர்ப்பதால் மனதிற்கு நிம்மதி ஏற்படுகிறது. இதை உணர்ந்து அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அந்த வகையில் சிவகாசி ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இங்கு வேம்பு, புங்கை, தேக்கு, உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படுகிறது. இது தவிர மா, கொய்யா, துளசி,…

Read More

அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், இணை இயக்குனர் உத்தண்டராமன் ஆய்வு செய்தனர். உதவி இயக்குநர் ரவிசங்கர், உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் பூவலிங்கம் உடனிருந்தனர்.

Read More

உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, என்றார். * காரியாபட்டி: மல்லாங்கிணறில் நடந்த முகாமில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது, தொகுதி வாரியாக குறைந்தது பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Read More

சிவகாசி : ”உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி : ”உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சவுந்திரபாண்டியனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும்தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை சமுதாய வளர்ச்சிக்காக மகமை என்ற பெயரில் கொடுத்தனர். அதை பின்பற்றி தான் 1952ல் ராஜாஜி ஆட்சியில் விற்பனை வரி முறை கொண்டு வரப்பட்டது,என்றார்.நாடார் மகாஜனசங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் அய்யனார் ரத்தம் சேகரித்தார்.

Read More