சிவகாசி : ”உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சவுந்திரபாண்டியனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும்தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை சமுதாய வளர்ச்சிக்காக மகமை என்ற பெயரில் கொடுத்தனர்.
அதை பின்பற்றி தான் 1952ல் ராஜாஜி ஆட்சியில் விற்பனை வரி முறை கொண்டு வரப்பட்டது,என்றார்.நாடார் மகாஜனசங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் அய்யனார் ரத்தம் சேகரித்தார்.