மாசில்லா சிவகாசி

சிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது வெயிலில்தான் உணர முடிகிறது.

மழை பொழிய மரங்கள் எவ்வளவு முக்கியமோ மன நிம்மதிக்கும் மரங்கள் அவசியம். தற்போது பெரும்பாலானோர் செடிகளின் அருமை உணர்ந்து மாடி, காலி மனையில் தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். பலர் புதிதாக வீடு கட்ட துவங்கும் போதே செடிகளையும் வளர்க்கிறார்கள். செடிகள், மரங்கள் வளர்ப்பதால் மனதிற்கு நிம்மதி ஏற்படுகிறது. இதை உணர்ந்து அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அந்த வகையில் சிவகாசி ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இங்கு வேம்பு, புங்கை, தேக்கு, உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படுகிறது. இது தவிர மா, கொய்யா, துளசி, நித்திய கல்யாணி, அரச மரக்கன்று, பட்டு வாகை, ஆலம் உள்ளிட்ட மரக்கன்றுகளும் பூச்செடிளும் புதிதாக நடப்பட்டுபராமரிக்கப்படுகிறது. இதற்காகவே தனி நபர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகாசியை மாசில்லா நகராக மாற்ற ஊராட்சி மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

Related posts

Leave a Comment