குறையும் சுகாதார வளாகங்கள்: திறந்த வெளியை நோக்கி மக்கள்

ராஜபாளையம் : ராஜபாளையத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே இருந்த சுகாதார வளாகங்கள் இடிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் புதியதாக அமைக்காததால் பொது மக்கள் பலரும் திறந்த வெளியை நாடும் நிலை தொடர்கிறது.

நகரின் பல்வேறு பகுதி வார்டுகளில் இடமின்றி தனி கழிப்பறை வசதியின்றி உள்ளனர். இவர்களின் தேவைக்காக பொதுப்பகுதியில் பொது சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுய உதவி குழுக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு காரணங்களால் சுகாதார வளாகங்கள் பல இடிக்கப்பட்டு உள்ளன.

இவற்றிற்கு பதில் புதியதாக கட்ட அப்பகுதியினர் முறையிட்டு வருகின்றனர்.ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய கடை பஜார் பகுதியில் இருந்த மகளிர் சுகாதார வளாகம் சிதிலமடைந்ததால் அதை இடித்து விட்டு புதிதாக கட்ட டெண்டர் விடப்பட்டிருந்தது. ஒரு ஆண்டை கடந்தும் பணி துவங்க வில்லை.

சங்கரன் கோயில் முக்கு பகுதியில் இருந்த சுகாதார வளாகம் தாமிரபரணி குடிநீர் மேல்நிலை தொட்டிக்காக இடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.நகரின் மையப்பகுதி ரைஸ் மில் ரோட்டில் போதிய இட வசதி இருந்தும் சுகாதார வளாகம் அமைக்காதாதால் இப்பகுதியினர் திறந்த வெளியை நாடுகின்றனர்.

Related posts

Leave a Comment